வேத வாசிப்பின் மகிமை
திருக்குர்ஆன் தமிழ்
தர்ஜமா தஃப்ஸீர் ஒரு ஆய்வு :
வேத வாசிப்பின் மகிமை :
=========================
தொடர்ச்சி.....
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آَيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴾ [الأنفال: 2].
وقد ورد في الحديث عن عبد الله بن أحمد بن حنبل، أنه قال: "سمعت أبي يقول: رأيت رب العزة عز وجل في النوم. فقلت: يا رب، ما أفضل ما تقرب المتقربون به إليك؟ فقال: كلامي يا أحمد. فقلت: يا رب، بفهم أو بغير فهم؟ فقال: بفهم وبغير فهم
அஹமது பின் ஹம்பல் (ரஹ்) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
எனது தந்தை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்; உறக்கத்தின் போது கனவில் கண்ணியமும் உயர்வும் மிக்க அல்லாஹ்வை நான் பார்த்தேன்; "இறைவா! உனக்கு நெருக்கமானவர்கள் எப்படி உன்னிடம் நெருக்கம் பெறுகிறார்கள்? அவர்கள் எப்படி சிறப்பை அடைகிறார்கள்?" என்று நான் கேட்டேன்.
அதற்கு அல்லாஹ், "அஹமதே! எனது வேதம்தான் காரணம்"என்று கூறினான்.
"இறைவா! அவர்கள் விளங்கி படித்ததாலா? அல்லது விளங்காமல் படித்ததாலா?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ், "அவர்கள் விளங்கி படித்தாலும் அல்லது விளங்காமல் படித்தாலும் எனது நெருக்கம் உண்டு" என்று கூறினான்.
நூல் : தாரிக் பக்தாத், அஸ்ஸியர்
Comments
Post a Comment