பசியினால் நரகமாக மாறிவரும் காசா நகரம்

பசியினால் நரகமாக 
மாறிவரும் காசா நகரம் 
=======================

உலகத்தில் இதுவரை யாரும் பயன்படுத்திறாத பசி எனும் ஆயுதத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனில் உள்ள பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உட்பட அனைவரையும் கொன்று தீர்த்திட இஸ்ரேலும் அமெரிக்காவும் முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதை உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; இது மிகப்பெரும் வெட்கக்கேடான விஷயம். 

இந்த இரு நாடுகளும் செய்வதைப் பார்த்து உலக நாடுகளில் வாழும் பெரும்பாலானவர்கள் மனிதாபிமானத்தோடு தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

அதையும் இந்த இரண்டு நாட்டவர்கள் கண்டுகொள்ளாமல் கடந்துச் செல்கிறார்கள். இந்த இரண்டு நாட்டின் ஆட்சியாளர்கள் நரகாசுரர்களா? அரக்கர்களா? அல்லது மனித உருவத்தில் உள்ள பெயர் வைக்கப்படாத பிராணிகளா?

அல் ஜஸீரா தொலைக்காட்சியின் பத்திரிக்கை நிருபர் அனஸ் அல் ஷரீஃப் என்பவர் காசாவிற்குள் நுழைந்து கடந்த ஒரு மாத காலமாக எந்தெந்த இடங்களில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள்? இந்த பட்டினியின் கொடூர தாண்டவம் என்ன? என்பது குறித்து, அனைத்து மக்களிடம் பேசியும், காட்சிகளை வீடியோ எடுத்தும் ஜோர்டான் உட்பட அனைத்து அரபு நாடுகளின் டிவி சேனல்களுக்கும் செய்திகளை தினம் தினம் அனுப்பி கொண்டே இருந்தார். 

அதன் காரணமாக மனம் பொறுக்க இயலாத முஸ்லிம் மக்கள் வியாழக்கிழமை அன்று  ஜோர்டானில் இருந்து 36 டிரக்குகள் மூலம் ரொட்டி செய்யப் பயன்படும் கோதுமை மாவுகளை அனுப்பி இருக்கிறார்கள்.

அது வடக்கு காசாவில் உள்ள சிட்டின் எனும் நுழைவாயில் வழியாக காசாவிற்குள் வந்துள்ளது இதனால் ஓரளவு பசி பட்டினிகள் குறைய வாய்ப்புண்டு.

இதை காணொளியாக பார்க்க....

https://youtu.be/Sc-qgjYlw3w?si=B2RCFuvd5FNK9C5f

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்