நூஹ் நபியின் கப்பல் புறப்படும் போது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்ச்சி :

நூஹ் நபியின் கப்பல் 
தரை தட்டிய நாள் முஹரம் பிறை 10 
==≠==============================

கப்பல் புறப்படும் போது நிகழ்ந்த 
ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி : 

قال أبو بكر بن عبيد: حدثنا أبو عبد الله بن موسى حدثنا جعفر بن سليمان حدثنا عمرو بن دينار قهرمان آل الزبير حدثنا سالم بن عبد الله عن أبيه قال:

لما ركب نوح السفينة رأى فيها شيخا لم يعرفه قال له نوح: ما أدخلك؟ قال: دخلت لأصيب قلوب أصحابك فتكون قلوبهم معي وأبدانهم معك قال نوح: أخرج يا عدو الله فقال: خمس أهلك بهن الناس وسأحدثك منهن بثلاث ولا أحدثك باثنتين فأوحى إلى نوح لا حاجة بك إلى الثلاث مره يحدثك بالاثنتين فإن بهما أهلك الناس فقال هما : الحسد وبالحسد لعنت وجعلت شيطانا رجيما والحرص أباح لآدم الجنة كلها فأصبت حاجتي منه بالحرص

ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தன் தந்தையிடம் இருந்து அறிவிப்பதாவது;

வெள்ளப் பிரளயத்தின் போது நூஹ் (அலை) அவர்கள் தம் கப்பலில் அனைவரையும் ஏற்றி ஆகிவிட்டதா என்பதை பார்வையிட ஒவ்வொரு தளமாகச் சென்றார்கள்.

அப்பொழுது ஒரு தளத்தில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்; அவரை இதற்கு முன் நூஹ் (அலை) அவர்கள் பார்த்ததில்லை .

நூஹ் (அலை) அவர்கள், "நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்? நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். 

அதற்கு அவர், "உம் தோழர்களின் இதயங்களை ஈர்ப்பதற்காக நான் வந்திருக்கின்றேன்; அவர்களின் இதயம் என்னோடு  இருக்கும்; அவர்களின் உடல் உம்மோடு இருக்கும்" என கூறினார்.

நூஹ் (அலை) அவர்கள், "அல்லாஹ்வின் விரோதியே! இப்லீஸே! உடனே வெளியேறு" என்று கூறினார்கள். 

இப்லீஸ் கூறினான்; "ஐந்து விஷயங்கள் இருக்கின்றன; அதனால் தான் மனிதர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்; அவற்றில் மூன்று விஷயங்களை உமக்கு நான் சொல்லித் தருகிறேன்; இரண்டு விஷயங்களை உமக்கு நான் கண்டிப்பாக சொல்லித் தரவே மாட்டேன்" என்று கூறினான்.

நூஹு (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். உடனே அல்லாஹ் வஹீ அறிவித்தான். 

"நபியே! மூன்று விஷயங்கள் குறித்து எனக்கு அவசியமில்லை; நீ சொல்ல மாட்டேன் என்று சொன்ன அந்த இரண்டு விஷயங்களை மட்டும் சொல்' என்று கேட்பீராக" என வஹீ அறிவித்தான்.

நூஹ் (அலை) அவர்கள் அவனிடம் கேட்டார்கள்; அவன் வேண்டா வெறுப்பாக, "இந்த இரண்டைக் கொண்டுதான் மக்கள் அழிந்து போகிறார்கள். 

ஒன்று பொறாமை : ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடத்திலும் வானவர்களிடத்திலும் பெரிய மரியாதை கிடைக்கிறதே அது தமக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை பட்டதின் காரணமாக நான் இறைவனால் சபிக்கப்பட்டும், இறைவனால் நிந்திக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டும் இருக்கின்றேன்; எனவே பொறாமை படாதீர்கள்.

இரண்டு : பேராசை.
சொர்க்கத்தில் நான் நிரந்தரமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்; ஆனால், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அதில் நிரந்தரமாக இருக்கும்படி செய்து விட்டான்; எனவே பேராசை கொள்ளாதீர்கள்.

நூல் : இப்னு அபீ துன்யா

(இரண்டு ரிவாயத்துகளின் ஒற்றைத் தொகுப்பு)

இன்று தரையில் வாழும் உயிரினங்களான பறவைகள், விலங்குகள், கால்நடைகள், மரம், செடி கொடிகள், ஊர்வினங்கள் போன்ற அனைத்தும் கப்பலில் ஏற்றப்பட்டு மீண்டும் தரையில் இறங்கிய நாள் முஹர்ரம் பிறை பத்து ஆகும்.

 நூஹ் நபி அலை அவர்களின் கப்பலின் நங்கூரம் இதுதான் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்