கவிஞர் கண்ணதாசன் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் தவறுகள் : - 2

கவிஞர் கண்ணதாசன் செய்த திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பின் தவறுகள் : - 2
===============================

நேற்றைய தொடர்ச்சி......

பின்னர் சில மாதங்களில் அந்த மொழி பெயர்ப்பு வருவது நின்றுவிட்டது" என்று என்னிடம் எனது சிறிய தந்தை B.  முஹம்மது சுல்தான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

இது சம்பந்தமாக மற்றொரு ஆலிம் கூறிய சுவாரசியமான நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; 

கீழ்காணும் வசனத்திற்கு கண்ணதாசன் அவர்கள் இப்படி மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.

كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ ۗ 

(ஈஸா அலை அவர்களும் அவரின் தாயாரான மரியம் அலை ஆகிய ) அவர்கள் இருவரும் உணவை சாப்பிட்டு வாழ்ந்தார்கள்; 5 : 75

மேற்கண்ட மொழிபெயர்ப்பு சரியானது; கண்ணதாசன் அவர்கள், "அவர்கள் இருவரும் உணவை சாப்பிடவில்லை" என்று எழுதி இருந்தார். 

இவர் இதனை ஏன் இப்படி எழுதினார் என்றால், இவர் ஏற்கெனவே எழுதிய 'இயேசு காவியம்' எனும் நூலில் அன்னை மரியம் (அலை) அவர்களையும், ஈஸா (அலை) அவர்களையும் கிறிஸ்தவர்கள் தம் கடவுளராக ஏற்றுக் கொண்டது போல் இவரும் அந்தக் கருத்தில் உடன்பட்டு கடவுளாக ஏற்றுக்கொண்டு விட்டார். 

'இயேசு காவிய'த்தில் அவர்கள் இருவரும் கடவுள் என சொல்லிவிட்டு, திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் "அவர்கள் இருவரும் கடவுள் இல்லை" என்று சொல்லி இருப்பதை ஒப்புக்கொண்டால் கிறிஸ்தவர்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற அச்சத்தில் இவ்வாறு எழுதி இருந்தார்.

அதாவது அவர்கள் இருவரும் கடவுள் என்றால் சாப்பிட மாட்டார்கள்; மனிதர்கள் என்றால் சாப்பிடுவார்கள். 

திருக்குர்ஆனில் அல்லாஹ் "அவ்விருவரும் மனிதர்கள் தாம், சாப்பிடக் கூடியவர்கள் தாம்" எனத் தெளிவுபட சொல்லி இருக்கின்றான்.

எனவே திருக்குர்ஆன் சொல்வது போல் அவ்விருவரும் சாப்பிடுகிறவர்கள் என்று மொழிபெயர்ப்பு செய்யாமல் "அவ்விருவரும் சாப்பிடவில்லை" என மொழிபெயர்ப்பு செய்து தவறிழைத்திருந்தார். 

இயேசு காவியத்தை உண்மைப்படுத்த திருக்குர்ஆனை பொய்யாக்குவதா? 

இதை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்வாரா? 

எந்த ஒரு தமிழ் அறிஞரும் ஏற்றுக்கொள்வாரா? 

இந்தத் தர்ஜமாவை படித்த ஒரு ஆலிம் கொதித்து எழுந்து இப்படி கூறினார்; 

"அப்பாஸ் இப்ராஹிம் என்பவன் கண்ணதாசனுக்கு பின்புலமாக இருந்து திருக் குர்ஆனுக்கு விளக்கம் எழுதி சம்பாதிப்பதற்கு பதிலாக, தனது மனைவியை கூட்டி கொடுத்து சம்பாதிப்பது நல்லது"

இப்படிக்கு.... என தன் பெயரையும் விலாசத்தையும் எழுதி இருந்தார். 

இதை அப்படியே தனது அடுத்த பாகத்தில் 'உரத்த குரல்' எனும் பகுதியில் கண்ணதாசன் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த  ஆலிம் சந்தோஷப்பட்டு கொண்டார்; தவறான மொழிபெயர்ப்புக்கு தம்மால் இயன்ற ஒரு பணியை செய்து விட்டோம் என மனநிறைவு கொண்டார்.

அந்த ஆலிமின் பதிவைக் கண்ட  நிர்வாகத்தினர் அந்த ஆலிமிடம் வந்து, "ஒரு ஆலிம் இப்படி எழுதலாமா? நாகரீகம் வேண்டாமா?" என்றெல்லாம் நாகரீகம் இல்லாமல் பேசினார்கள். 

அந்த ஆலிம், "இந்த வருடத்தோடு எனது கணக்கை நான் முடித்துக் கொள்கிறேன்; அடுத்த வருடத்தில் இருந்து வேறு ஆலிமை பார்த்துக் கொள்ளுங்கள்" என சொல்லிவிட்டார். 

அவ்வாறே அந்த ஆலிம் மதரஸாவில் இருந்து வெளியேறினார். 

இப்படி பல ஆலிம்கள் பல இழப்புகளை சந்தித்து, தவறான மொழிபெயர்ப்பு வருவதை தடுத்து நிறுத்தினார்கள்.

கண்ணதாசன் திருக்குர்ஆனை உரைநடையில் எழுதி இருந்தாலோ, கவிதை நடையில் எழுதி இருந்தாலோ அது கண்ணதாசனுக்கு தான் பெருமை! தமிழுக்குத்தான் பெருமை! 

குர்ஆனுக்கோ, இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ அதில் எந்த பெருமையும் எந்த நன்மையும் இல்லை!

உரத்த குரல் எனும் விமர்சனப் பகுதியில் வெளிவந்துள்ள கடிதங்கள் பெரும்பாலானவற்றில் கண்ணதாசன் செய்த மொழி பெயர்ப்பின் தவறுகளை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

தவறுகள் நிறைந்த ஒன்று எப்படி சரியான வழியை காட்டும்? 

அரபு ஞானம் உள்ளவர்கள் சுட்டிக் காட்டும் தவறுகளை தமிழ் ஞானம் உள்ள அறிஞர்கள் எப்படி மறுப்பார்கள்?

தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொண்ட கண்ணதாசன் அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை!

மற்றொன்று: அவரின் மொழிபெயர்ப்பு வெளிவருவதில் இறைவனுக்கு விருப்பமில்லை; அதனால்தான் அது வெளிவரவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணதாசன் அவர்கள் சிறந்த ஒரு ஆன்மீகவாதி என்பதில் சந்தேகம் இல்லை; அதனால் தான் அவர் தொடர்ந்து திருக்குர்ஆனுக்கு மொழிபெயர்ப்பு செய்வதை நிறுத்திக் கொண்டார்.

அவர் அடிக்கடி சொல்வாராம்; "புண்ணியம் தேடி புனித குர்ஆனை மொழிபெயர்க்க முனைந்தேன்; ஆனால் அந்த சமுதாய மக்கள் எதிர்ப்பதால் நிறுத்துவதே புண்ணியம் எனக் கருதி நிறுத்திக் கொண்டேன்;" அவரின் கடைசி ஆக்கம் வெளிவந்த தேதி 30 / 12 / 1977

-
_
~
=

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்