தமிழில் நான்கு தஃப்ஸீர்கள்

தமிழில் நான்கு தஃப்ஸீர்கள் : 
=============================

நேற்றைய தொடர்ச்சி....

முப்பது தர்ஜமாக்களில் நான்கு தஃப்ஸீர்களும் அடங்கும். 

1.  எஸ். எஸ். அப்துல் காதிர் பாகவி உத்தமபாளையம் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தஃப்ஸீருல் ஹமீத் எனும் பெயரில் ஏழாயிரம் பக்கங்களுக்கும் மிகுதமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவே தமிழில் வெளிவந்த முதல் தஃப்ஸீர் ஆகும்.

2.  தென்காசி அப்துர் ரஹ்மான் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் "அன்வாருல் குர்ஆன்" என்னும் பெயரில் தஃப்ஸீர் வெளியிட்டு இருக்கிறார்கள். அதனை கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் வெளியிட்டிருந்தது.

3. வேலூர் பாகியாதுஸ்  ஸாலிஹாத் அரபுக் கல்லூரி நிர்வாகம் "ஜவாஹிருல் குர்ஆன்" எனும் பெயரில் தஃப்ஸீரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

4. சென்னை ரஹ்மத் பதிப்பகம் நிறுவனத்தார் "தஃப்ஸீர் இப்னு கஸீர்" எனும் பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நான்கும் விற்பனையில் உள்ளது. 

இது மட்டும் இன்றி பொதக்குடி அப்துல் கரீம் ஹள்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தர்ஜுமத்துல் குர்ஆன் ஃபீ தன்வீரில் பயான்  எனும் பெயரில் ஐந்து பாகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

லால்பேட்டை முஹம்மது அன்சாரி மன்பயீ ஹள்ரத் அவர்கள் தஃப்ஸீர் அஷ்ஷஃராவி எனும் பெயரில் நான்கு பாகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் கல்புல் குர்ஆன் யாஸீன் சூரா விளக்கவுரை எனும் பெயரில் நான் தர்ஜுமாவும் தஃப்ஸீரும் செய்து வெளியிட்டிருக்கிறேன்.

இதுபோல் யாஸீனுக்கு பலரும் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள். சூரத்துல் ஹுஜராத் திற்கு கடையநல்லூர் அன்சாரி ஹள்ரத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள்.

மேலும் சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு சொந்தமாகவும், உருது மொழிகளில் இருந்தும் பலர் தமிழில் மொழி பெயர்த்தும் தஃப்ஸீர் விரிவுரை எழுதியும் இருக்கிறார்கள்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்