ஸஹாபாக்ளில் எத்தனைபேர் ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்? "How many Sahabah have narrated Hadiths?"

எத்தனை ஸஹாபாக்கள் 
ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்?

"How many Sahabah have narrated Hadiths?"
====================================

நபி (ஸல்) அவர்கள் சொன்னது, செய்தது, பிற நபி தோழர்கள் சொன்னவற்றை கேட்டுக் கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் அமைதியாக இருந்தது, 

நபி (ஸல்) அவர்கள் எதிரில் பிற ஸஹாபாக்கள் செய்ததை பார்த்துக் கொண்டு நபிகள் நாயகம் அவர்கள் அமைதியாக இருந்தவை ஆகிய இந்த நான்கு வழிமுறைகளில் இருப்பவற்றை மட்டுமே ஹதீஸ்கள் என்று சொல்லப்படும். 

நபித்தோழர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்து தெளிவான பதிவுகள் இல்லை என்றாலும் "124000/ ஆண், பெண் ஸஹாபாக்கள் இருந்ததாக" இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்களில் 63000/ பேர் மதீனாவிலும் 3000 பேர் சுற்று வட்டார அரபு கோத்திரத்தாரிலும் இருந்தார்கள். மற்றவர்கள் மக்கா மற்றும் சில நாடுகளில் இருந்தார்கள்.

ஆனால் சுமார் 10,000 ஸஹாபாக்களின் பெயர்களும் வரலாறுகளும் மட்டுமே நமக்கு பதிவில் கிடைக்கின்றது. 

நபி (ஸல்) அவர்கள் வாழும் பொழுதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபி தோழர்கள் இறந்து போயிருக்கிறார்கள்; அவர்களும் இந்த எண்ணிக்கைக்குள் அடங்குவர்.

பதிவுகளும், வரலாறுகளும், அடையாளங்களும் தெரிந்த நபித்தோழர்களில் 7554 நபித்தோழர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். 

இவர்களில் சுமார் 1800 பேர் பெண் ஸஹாபாக்கள் ஆவர். 

ஒட்டுமொத்த ஸஹாபாக்களில்  ஏழு பேர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். 

மேலும் 11 ஸஹாபாக்கள் 200க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். 

21 ஸஹாபாக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். 

அஷரத்துல் முபஷ்ஷரா எனும் சொல்லப்படக்கூடிய 10 நபி தோழர்கள் ஏறத்தாழ 100 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். 

200க்கும் மேற்பட்ட ஸஹாபாக்கள் பத்துக்கும் குறைவின்றி ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள்.

300க்கும் மேற்பட்ட நபி தோழர்கள் ஒரு ஹதீஸை அறிவித்திருக்கிறார்கள்.

இமாம் அஹமது பின் ஹம்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 28 ஆயிரம் ஹதீஸ்களை சுமார் 900 ஸஹாபாக்களிடம் ஸனது - அறிவிப்பாளர் சங்கிலி தொடர் நபிகள் நாயகம் அவர்களிடம் சென்று அடைந்துள்ள ஹதீஸ்களை  அறிவித்து இருக்கிறார்கள். 

நூல் : உஸுதுல் காபா 

மேலும் விபரங்களுக்கு......

رواة الحديث من الصحابة رضوان الله عليهم https://share.google/ILd0HSSa0NgbNai7y

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்