மயிலைத் தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் நன்றி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் 
வ ரஹ்மத்துல்லாஹி 
வ பரக்காத்துஹு

மயிலைத் தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் நன்றி அறிவிப்பு 
================÷=====================================================
இன்று மதீனா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் 18 பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், இஸ்லாமியக் கட்சிகளின் பகுதி பொறுப்பாளர்கள் என அனைவரும் பெரும் திரளாக கூடியிருந்தார்கள். 

மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலை தொகுதி வேட்பாளர் த. வேலு அவர்கள் வருகை தந்து அனைவரிடமும் வாக்கு சேகரித்தார்.

அச்சமயம் ஐந்து கோரிக்கைகள் முன்மொழியப்பட்டது அவை அனைத்தையும் செய்து தருவதாக வாக்களித்தார். 

வருகை தந்திருந்த அனைவருக்கும் மயிலை தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.

அன்புடன் 

மயிலை தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்
14/04/2026

மயிலைத் தொகுதி அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பிற்கு உட்பட்ட பள்ளிவாசல்கள்.

கச்சேரி ரோடு ஜும்ஆ மஸ்ஜித் மயிலாப்பூர்.

அருண்டேல் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மயிலாப்பூர்.

அப்பு முதலி தெரு சார்சம்மான் பள்ளிவாசல் மயிலாப்பூர்.

மசூதி தெரு ஆஹா முஹையதீன் பள்ளிவாசல் மந்தைவெளி. 

சென் மேரிஸ் ரோடு ஈத்கா மஸ்ஜித் பள்ளிவாசல்  மந்தைவெளி

ஜோனகன் தெரு மதீனா பள்ளிவாசல் பட்டினம்பாக்கம் சாந்தோம்.

மெரினா ஸ்கொயர் எதிரில் டாக்டர் நடேசன் ரோட்டில் உள்ள அக்பர் பாஷா மஸ்ஜித்

டாக்டர் நடேசன் ரோட்டில் உள்ள ஃபக்கீர்  லப்பை மஸ்ஜித் பள்ளிவாசல் 

டாக்டர் நடேசன் ரோட்டில் உள்ள தஸ்தகீர் சாஹிப்  தர்கா மஸ்ஜித் பள்ளிவாசல்

லாயர்ஸ் ரோட்டில் உள்ள பப்பு மஸ்தான் தர்கா மஸ்ஜித் பள்ளிவாசல் 

லாயர்ஸ் ரோடு இஸ்மாயில் கிரவுண்டு மஸ்ஜிதே யூசுஃபியா பள்ளிவாசல்

மயிலாப்பூர் லஸ் கல்வி வாரி தெரு அல்ஹுதா மஸ்ஜித் பள்ளிவாசல்

மயிலாப்பூர் லஸ் பஜார் ரயில்வே ஸ்டேஷன் எதிரில்  உள்ள மஸ்ஜிது பள்ளிவாசல்

ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் உள்ள மஸ்ஜிதே முஹம்மதிய்யா பள்ளிவாசல்  

லாயஸ் ரோடு மக்காபுரம் மஸ்ஜிதே மக்காபூர் மதரசையே பிலால் பள்ளிவாசல்

சீனிவாசபுரம் மஸ்ஜித நூர் பள்ளிவாசல் பட்டினம் பாக்கம்

சாந்தோம் லூப் சாலை மஸ்ஜித் தக்வா பள்ளிவாசல் டும்மிங் குப்பம்.

ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாக பெருமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் பெருவாரியாக வந்து கலந்து கொண்டார்கள்.

மயிலைத் தொகுதியில்  உள்ள இஸ்லாமிய கட்சிகள், சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் கிளைகளின் விபரம்.
===============÷====================================================

மயிலை தொகுதி அனைத்து மஸ்ஜித் உலமா பெருமக்கள் மற்றும் நிர்வாகிகள்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி மயிலைத் தொகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மயிலை பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் 

எஸ் டி பி ஐ கட்சி மயிலை தொகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள்.

மனிதநேய மக்கள் கட்சி பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் 

அண்ணா நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் லஸ், மைலாப்பூர் 

லஸ் ராயப்பேட்டை நெடுஞ்சாலை  நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.

மயிலைத் தொகுதி முஸ்லிம்களின் வேண்டுகோளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் 
===============÷=====================================================

1.  132  பிளாக் கார்னர் சீனிவாசபுரம் பட்டிணம் பாக்கம் எனும் விலாசத்தில் மஸ்ஜிதே நூர் மதரசா முஹம்மதியா எனும் பள்ளிவாசல் கடந்த 70 வருடங்களாக இருந்து வருகிறது.

அதைப்போல் சாந்தோம் லூப் சாலை டும்மிங் குப்பம் 65/5 பின்புரத்தில் மஸ்ஜித் தக்வா மதரசா பிலால் எனும் பள்ளிவாசல் கடந்த 40 வருடங்களாக இருந்து வருகிறது.

இவை இரண்டுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு   வாரியத்தின் மூலம் நிரந்தர Allotment  - அலாட்மென்ட்  வழங்குமாறும், அதே இடத்தில் தொடர்ந்து அந்தப் பள்ளிவாசல்கள் இறைப் பணியாற்றிட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அன்போடு வேண்டுகிறோம்.

2.   மயிலை தொகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத் பள்ளிவாசல்களின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தத் தொகுதியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மயிலைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மையவாடிகள் இருக்கின்றன. 

டாக்டர் நடேசன் ரோடில் உள்ள *தஸ்தகீர் சாஹிப் தர்கா மற்றும் மையவாடி.*

அதே பகுதியில் லாயர்ஸ் ரோட்டில் *பப்பு மஸ்தான் தர்கா மையவாடி* என இரண்டு முஸ்லிம் அடக்கத்தளம் இருக்கின்றது. 

இந்த மையவாடியில் நடைபாதைகளோ மின்விளக்குகளோ  இல்லை. 

எனவே தாங்கள் இந்த இரண்டு  மையவாடிகளுக்கும் மின்விளக்குகளும் சிமெண்ட் சாலையும் அமைத்து தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

3.  சென்னை மயிலாப்பூர் லஸ் பஜாரில் பிளாட்பார கடைகள் 154 இருந்தன; தற்பொழுது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் அந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது; அந்த கடைகளுக்கு மாற்று இடமாக மயிலை முட்டக்கண்ணி அம்மன் கோவில் ரயில் நிலையம் அருகில் கடைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் அங்குள்ள கடை உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக  Allotment Order , மின் இணைப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு ஆவணம் செய்வதோடு அந்தக் கடைகளை தாங்களே முன்னின்று கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் மயிலை தொகுதி அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

4.  மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில்  மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் மசூதி அருகில் வர இருக்கின்றது.  ஏற்கனவே பஸ் பயனாளிகளால் 'மசூதி ஸ்டாப்' என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தள்ளது. 

எனவே கச்சேரி ரோட்டில் மசூதிக்கு அருகில் ஏற்படுத்தப்பட உள்ள மெட்ரோ ஸ்டேஷனுக்கு "கச்சேரி ரோடு மசூதி" என்றோ, "ஜும்மா மஸ்ஜித்" (jumma masjid) என்றோ பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்.

இந்தத் தகவலை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 
அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை வைக்கிறோம்.

மேலும் கச்சேரி ரோட்டில் மெட்ரோ ஸ்டேஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாக அறிகின்றோம்; போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதின் காரணமாக அந்த சாலையை முழுமையாக திறந்து விடக் கோருகிறோம்; அல்லது ஆட்டோ மற்றும் பைக் ஆகிய வாகனங்கள் செல்கிற அளவிற்கு ஒரு பகுதியில் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.

5.  மயிலைத் தொகுதியில் 18 பள்ளிவாசல்கள் இருக்கின்றன; இந்தப் பள்ளிவாசல்களில்  இமாமாகப்  பணியாற்றக்கூடிய உலமா பெருமக்களுக்கு சாந்தோம் கடற்கரை  லூப் சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய ஹவுசிங் போர்டு வீடுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டை ஒதுக்கீடு செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்