இறைவனின் ஆதரவு அறிவுக்கா? ஆத்மாவுக்கா?
இறைவனின் ஆதரவு
அறிவுக்கா? ஆத்மாவுக்கா?
நேற்றைய தொடர்ச்சி....41
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
======================================
இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் கூறுவதாவது;
மனிதனிடம் இரண்டு அரசர்கள் இருக்கிறார்கள்; ஒன்று கெட்ட ஆத்மா, மற்றொன்று அறிவு.
இந்த இரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்து எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டே இருக்கும்.
தீய ஆத்மாவிற்கு தளபதி ஷைத்தான் ஆவான்.
அறிவுக்கு தளபதி நல்ல ஆன்மா ஆகும்.
தீய ஆத்மா மற்றும் அறிவு ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வேட்கையில் தொடர்ந்து போரிடும் போது இறைவன், "நீங்கள் எவ்வளவு வீரத்துடன் போரிட்டாலும் எனது உதவி எந்த சேனைக்கு ஆதரவாக இருக்கிறதோ அவர்களே வெற்றி பெறுவார்கள்" என்று கூறுவான்.
அல்லாஹ்வின் ஆதரவு பெற்ற தரபு அறிவு ஆகும்.
நஃப்ஸ் எனும் ஆத்மாவை ஒதுக்கி, ஒதுங்கி வாழ வேண்டும்.
அல்லாஹ்வின் உதவி அறிவுக்கு இருப்பதால் அதை சார்ந்து வாழ வேண்டும்.
இறைவனுடைய திருநாமங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது 'அல்லாஹ்' எனும் சொல்லாகும்.
'அல்லாஹ்' எனும் சொல் ஒரு இஸ்முல் அஃலம் - மந்திரச் சொல்.
வேறு எந்த சிந்தனையும், கற்பனையும் இல்லாமல் 'அல்லாஹ்' என்று ஒருவர் சொன்னால், அப்பொழுதே அவருடைய தேவைகள் நிறைவேறும்.
ஒரு பொருளை உருவாக்க இறைவன் "குன் - ஆகிவிடு" என்று சொன்னால், அது ஆகிவிடுகிறது.
இறைநேசர்கள் 'பிஸ்மில்லாஹ்' என்று சொன்னால் அவர்கள் எதை நினைத்து சொன்னார்களோ அதை அந்தச் சொல் உருவாக்கிக் கொடுத்து விடும்.
அந்த அளவுக்கு வலிமையான, சக்தி வாய்ந்த சொல் அல்லாஹ் .
எனவே இந்த சொல்லை மிக கவனமாக சொல்லி வாருங்கள்.
தொடரும்......
Comments
Post a Comment