Posts

Showing posts from June, 2026

1438 வது ஹஜ்ஜின் உருக்கமான நினைவுகளும் அனுபவங்களும்

Image
1438 வது ஹஜ்ஜின் உருக்கமான நினைவுகளும் அனுபவங்களும்  =================÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷  ﴿فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ﴾ “அறிவுடையவர்களே! இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.” (ஸூரத்துல் ஹஷ்ர் 59:2) அருள்மறை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், முந்தைய சமூகங்களின் வாழ்க்கைச் சம்பவங்களையும் எடுத்துரைக்கிறான். அவற்றைக் கூறிவிட்டு, அவற்றிலிருந்து மனிதர்கள் படிப்பினை பெற வேண்டும், நல்வழியில் நடக்க வேண்டும், தவறான வழிகளில் இருந்து விலகி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறான வசனங்களை அல்லாஹ் அடிக்கடி குறிப்பிடுகிறான். அன்பார்ந்த வாசகர்களே! இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்த பிறகு, உங்களுக்கு எது சரியானது என்று தோன்றுகிறதோ அதை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துங்கள். எது சரியல்ல என்று உணருகிறீர்களோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். மேலும், இந்தக் கட்டுரையில் ஹஜ் தொடர்பான பல்வேறு அனுபவங்கள், படிப்பினைகள் மற்றும் அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை சிந்தித்து வாசித்து, தங்களுடைய வாழ்க்கையிலும் ஹஜ் பயணத்திலும் பயனுள்ளவற்றை நடைமுறைப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்...