இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய ரவ்லாவின் ஆயிரம் வருட வரலாறு

இமாம் ஜீலானி (ரஹ்)  அவர்களுடைய 
ரவ்லாவின் ஆயிரம் வருட வரலாறு
=====================================

நேற்றைய தொடர்ச்சி......55

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இறந்த பிறகு அன்றிருந்த அப்பாஸிய கலீஃபாவான அல் முஸ்தன்ஜிது பில்லாஹ் (ரஹ்) அவர்கள் ரவ்ழாவை சுற்றி எளிமையான முறையில் ஒரு குப்பாவையும், சுற்று சுவரையும் கி.பி. 1170 -1180 களில் கட்டி எழுப்பினார்.

கி.பி. 1258 மங்கோலியர் காலத்தில் ஹுலாக்கு கான் அவர்களின் தாக்குதலால் நாடே சிதைந்த போது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் ரவ்ழா மட்டும் எந்த சேதமும் ஆகாமல் பாதுகாப்பாக இருந்தது.

1295 - 1304 களில் இல் கானித் ஆட்சியாளர்களில் ஒருவரான கஸான் கான் அவர்கள் ரௌலாவை சீரமைத்தார். 

மங்கோலிய ஆட்சியாளர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர்; இவர் 1295 களில் இஸ்லாத்தை ஏற்றார்.  இவர்களின் வம்சத்தை الايلخانيون ilkhanid என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இல்கனித் பேரரசு வீழ்ச்சி அடைந்த பிறகு الجلائري - Jalayirid சுல்தான் உவைஸ் அவர்கள் ஈரான் ஈராக் பகுதியில் மிகப் பெரும் சக்தி வாய்ந்த அரசராக ஆனார்.

14 ஆம் நூற்றாண்டில் ஜலாயிரத் ஆட்சியாளர்களில்  ஒருவரான சுல்தான் உவைஸ் அவர்கள் புனரமைப்பு பணியை செய்தார்கள். 

1400 - 1500 காலகட்டத்தில் (قراقويونلو / Qara Qoyunlu) கராகோயன்லு ஆட்சியாளர்களில் ஒருவரான ஜஹான் ஷா جَهَانْ شَاه அவர்கள் மிகப்பெரிய அளவில் குப்பாவை வடிவமைத்து சிறப்பாக கட்டினார்; சுற்று சுவர்களையும் விரிவாக்கம் செய்து புதிதாக அமைத்தார்.

ஜஹான் ஷா இப்னு காரா யூசுப் (Jahān Shāh ibn Qara Yusuf) எனும்
இவருடைய சந்ததியினரின் ஆட்சியரில் ஒருவரான உஸ்மான் ஹசன் என்பவர் பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகங்களை மிகவும் சிறப்பாக பிரம்மாண்டமாக உருவாக்கினார்.

1534 காலகட்டத்தில் உதுமானிய பேரரசு பொறுப்பேற்ற பிறகு சுல்தான் சுலைமான் அல் கானூனி அவர்கள் வருவோர் தங்குவதற்கு ஏற்ற மண்டபங்கள் நுழைவு வாயில்கள் என பல புதிய கட்டிடங்களை கட்டினார். இவருடைய காலத்தில்தான் இந்த கட்டிடங்கள் யாவும் மிகவும் அழகான தோற்றத்தில் உருவானது. 

கி. பி. 1638 களில் நான்காம் சுல்தான் முராத் அவர்கள் அரசு செலவில் முழுமையாக புதுப்பித்தார். 

18,19 ஆம் நூற்றாண்டுகளில் இரண்டாம் சுல்தான் முஹம்மது அவர்கள் மதரஸா மற்றும் பள்ளிவாசல், ரவ்ழா ஆகிய அனைத்தையும் மராமத்து பணிகளைப் பார்த்து சிறப்பாக வடிவமைத்தார்.

1893 ஆம் ஆண்டு இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் இமாம் ஜீலானி ரஹ் அவர்களின் கப்ருக்கு மேலிருந்த குப்பாவை மிகவும் சிறப்பாக புதிய வடிவத்தில் கட்டி முடித்தார்.

1921 - 1958 காலகட்டத்தில் அன்று இருந்த ஈராக் அரசாங்கம் மின் விளக்குகளை பொருத்தி அழகு படுத்தியது.

1960 - 2000 காலகட்டங்களில் பள்ளிவாசல் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது; ஆங்காங்கே மார்பில்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டது. 

2000 - 2020 காலகட்டத்தில் புதிய வெள்ளை மார்பில் கற்கள் பதிக்கப்பட்டன; ரவ்ழாவின் உள்புறத்தில் நீள பச்சை வண்ணங்களில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டன; வாசல்களை அதிகமாக வைத்து வளாகங்கள் விரிவாக்கப்பட்டது.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்