உலகத்தை வென்ற இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்க்கை

உலகத்தை வென்ற இமாம் ஜீலானி 
(ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்க்கை 
=====================================

நேற்றைய தொடர்ச்சி....51

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

மனிதர்கள் உண்மையை விட கற்பனைகளையே அதிகம் விரும்பி கேட்கும் வளக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

அதனால் எது உண்மை? என தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமலும் இருக்கிறார்கள். 

ஆர்வமின்மை, அறியாமை போன்ற காரணங்களால் முஸ்லிம்கள், என்றோ சொல்லப்பட்ட "உலகப்பற்றை ஒழித்து வாழுதல்" எனும் இஸ்லாமிய கோட்பாட்டை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

"இஸ்லாம் மார்க்கம் அனுமதித்தவற்றையும் ஒதுக்கி வாழ்வதே உயர்ந்த வாழ்வு" என்பது போல்  எண்ணுகிறார்கள்; அது மிகவும் தவறானது. 

இவ்வாறு எண்ணினால் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)  அவர்கள் வைத்திருந்த பல கோடி திர்ஹங்கள், நான்கு மனைவியர், வியாபாரத் தளங்கள், (ஷாப்பிங் மால்கள்,) பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரராக இருந்த இவர்களை  நாம் உலக பற்றை ஒழித்து வாழ்ந்தவர் என்று  சொல்ல முடியாமல் போய்விடும். 

எனவே எது உலக பற்று? எதை ஒழித்து வாழ வேண்டும்? என்பது குறித்த ஒரு தெளிவு நமக்கு வேண்டும். 

அல்லாஹ்வைத் தவிர உலகத்தில் உள்ள எந்த ஒன்றின் பக்கமும் நமது கவனம் அதிகம் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இதுதான் உலக பற்றற்ற வாழ்க்கை. 

மனைவியர் மீதோ, பிள்ளைகள் மீதோ, நமக்குச் சொந்தமான செல்வத்தின் மீதோ, நாம் அடைந்திருக்கும் பதவிகள் மீதோ அதிக ஈடுபாடு காட்டாமல் வாழ்வதுதான் உலக பற்றற்ற வாழ்க்கை. 

தண்ணீரில் மிதக்கும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல, உலகத்தில் வாழ்ந்து கொண்டே உலகத்தில் இருப்பவற்றை அனுபவிக்க அதிக ஆசை கொள்ளாமல் வாழ்வதே உலக பற்றற்ற வாழ்வு. 

மேற்கண்ட கருத்துகளை மனதில் வைத்துக் கொண்டு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் குடும்ப வாழ்க்கையை கவனியுங்கள்.

ஒருவர் : தாங்கள் உலகப் பற்றை ஒழித்து வாழும் துறவியாக இருக்கிறீர்களே! அப்படி இருக்க தாங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்? 

ஜீலானி ரஹ்: சுமார் எனது 41வது வயது வரை திருமணம் செய்யாமல் தான் வாழ்ந்து வந்தேன்; குடும்பப் பற்றில் சிக்கி விடக்கூடாது என எண்ணியிருந்தேன்;

இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், "திருமணம் செய்து கொள்ளுங்கள்; அதுவே எனது வழிமுறை" என்று உத்தரவிட்டார்கள். 

எனவே நான் அந்த உத்தரவுக்கு கீழ்ப்படிந்து திருமணம் செய்து கொண்டு வாழ்கிறேன்; எனது நான்கு மனைவியரும் எனக்கு கீழ்ப்படிந்து செயல்படுகின்றனர்" என்று கூறினார்கள்.

தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்