திக்ரு செய்யும் போது திறக்கும் தெய்வ வாசல்
திக்ரு செய்யும் போது
திறக்கும் தெய்வ வாசல்
========================
நேற்றைய தொடர்ச்சி....42
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
போதிய மார்க்க அறிவு இல்லாமல் எந்த வகையான திக்ருகளை செய்தாலும் அதில் சீர்குலைவு ஏற்பட வாய்ப்புண்டு.
ஷரீஅத் எனும் விளக்கின் வெளிச்சத்தில் திக்ருகளை செய்ய வேண்டும்.
மார்க்க அறிவு போதிய அளவு இருக்கும் நிலையில் அமல்களை செய்து வந்தால் அல்லாஹ் மேலும் அறிவில் விசாலத்தை ஏற்படுத்துவான். அதன் காரணமாக ஞானத்தை எளிதில் அடைய முடியும்.
உலக ஆசைகளை அகற்றினால் மனம் வலிமை பெறும்.
அதன் காரணமாக திக்ரு மற்றும் இறைநினைவில் நிலைத்திருக்க அல்லாஹ் ஏற்பாடுகளை செய்து தருவான்.
நம்பிக்கையோடும் நல்லெண்ணத்தோடும் அல்லாஹ்வை குறைந்தபட்சம் நாற்பது நாட்கள் தொடர்ந்து திக்ரு செய்து வந்தால் ஞான வாசல் திறக்கும்.
ஞானம் பிறக்க ஆசைப்படுகிறவர்கள் நபிகள் நாயகத்தின் சுன்னத் - வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி வருவதோடு பித்அத் போன்ற தீய வழிகளை விட்டும் ஒதுங்கி வாழ வேண்டும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என நம்ப வேண்டும்.
துன்பங்கள் சூழும் பொழுது பொறுமையை கையாள வேண்டும். அவற்றிலிருந்து விடுபடவும், மற்ற நேரங்களிலும் அவனிடத்தில் மட்டுமே உதவிகளை கேட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்.
அவனிடமிருந்து உதவிகள் பெறாமல் இருந்து விடுவோம் என்கிற அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.
ஞானம் பெற விரும்புகிறவர் அனைத்தையும், அனைவரையும் நேசிக்க வேண்டும்; பாவங்களின் பக்கம் திரும்பாமல் தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
தொடரும்.....
Comments
Post a Comment