ஞானத்தை தேடிய பயணத்தின் பதிவுகள்

ஞானத்தை தேடிய 
பயணத்தின் பதிவுகள் 
==========================

நேற்றைய தொடர்ச்சி....49

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
==============================

நேற்று வெளியிட்டிருந்த 48வது தொடர்ச்சி மிகவும் சிரமப்பட்டும் மிக நீண்ட தூரம் பயணங்கள் செய்தும் எழுதி முடித்தேன். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்து தமிழில் வெளியிடப்பட்டிருந்த நூல்கள் சம்பந்தமாக எழுத வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே முடிவு செய்து அதற்கான தேடல்களில் ஈடுபட்டு வந்தேன். 

அதற்காக கன்னிமரா லைப்ரரி, முஹம்மதன் லைப்ரரி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தரமணி, பழங்காசு சீனிவாசன் நூலகம் ஆவடி ஆகிய நான்கு இடங்களுக்கு  ஒவ்வொரு நாளும் ஓர் இடத்திற்குச் சென்று தேடியதில் கிடைத்த நூல்கள் தான் நீங்கள் நேற்று பார்த்தது. 

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இருந்து வரலாற்று துறை பேராசிரியர்களான ஷாகுல் ஹமீது, சைய்யது அலி, மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி ஆகியவர்களோடு சென்றிருந்தேன்.

அவர்கள், அவர்கள் துறை சார்ந்த நூல்களை ஆய்வு செய்தார்கள்; நான் எனது தேவைகள் சார்ந்த நூல்களை ஆய்வு செய்தேன்.

(இதுபோல் நபி (ஸல்) அவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள வரலாறுகள், கவிதைகள், இலக்கிய நூல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். முனைவர் பட்டம் பெரும் மாணவர்கள் இது சார்ந்து ஆய்வு செய்யலாம்.)

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் குறித்த நூல்களைத் தேடி அலைந்ததில் சில மின் நூலக link -  லிங்க்கள் கிடைத்தன; அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://eap.bl.uk/project/eap1457
இது பிரிட்டிஷ் லைப்ரரியின் லிங்க் ஆகும். 

தமிழகத்தில் அழிவு நிலையில் இருந்த பல நூற்றுக்கணக்கான அரபு நூல்கள், தமிழ் நூல்கள், அரபு தமிழ் அர்வி நூல்கள் ஆகியன இந்த லிங்கில் காணலாம். 

https://rmrl.in/en/onlinecat

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தரமணி நூலகத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. 

அங்கு சென்றதும் அதன் லிங்கை நமது தொலைபேசிக்கு அனுப்பி தருவார்கள்; நாம் எந்த நூலை கேட்கின்றோமோ அந்த நூலை எடுத்து வந்து நமது கைகளில் வழங்குவார்கள்; நாம் அங்கேயே படித்துவிட்டு குறிப்புகள் எடுத்துக் கொண்டு வந்து விடலாம்.

https://share.google/eG71zB1yipImiIqah
தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தமிழ் மின் நூலகம் லிங்க் இது. 

இதில் புத்தகத்தின் பெயர், ஆசிரியரின் பெயர் ஆகியன வழங்கினால் நாம் கேட்கும் புத்தகம் அவர்களிடம் இருந்தால் நமக்கு கிடைக்கும்; இதில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன.

பழங்காசு சீனிவாசன் அவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் இந்து மதம் மற்றும் அரசியல் சார்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார். 

இவரிடம் பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்கள் வந்து அவருடைய நூலகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். 

இவரிடம் ஓலைச்சுவடிகள் உள்பட  250 வருட பழமையான நூல்கள் பழங்காலத்து நாணயங்கள் என நவீன காலத்தில் பழமைகளை சேர்த்து வைத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.

https://www.newindianexpress.com/good-news/2025/Nov/16/lifelong-pursuit-to-find-lost-pages

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் 16/11/2025 அன்று இவர் குறித்து ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது பாருங்கள்.

https://www.almajidcenter.org/en/?search=publications&model=Afaq+Magazine&year=&name=

இந்த லிங்கில் பல நாடுகளில் கிடைக்கப்பெற்ற கையேட்டு பிரதி நூல்களை காணலாம்.

https://millireport.com/availability-of-historical-documents-and-some-important-digital-archives/

சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பணியாற்றும் நண்பர் சையது அலி ( Saidali P P ) அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையை கீழ்காணும் லிங்கில் பாருங்கள். 

அது மலையாளத்தில் இருக்கும்; நீங்கள் தமிழில் மாற்றி படிக்கலாம்; இதில் 30-க்கும் மேற்பட்ட நூலக link லிங்குகள் இருக்கின்றன பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1947 களுக்கு முன்புள்ள பழமையான நூல்கள் உங்களிடம் இருந்தால் மேற்கண்ட நான்கு நூலகங்களில் சென்று ஒப்படைத்து விடுங்கள் அவர்கள் முறையாக பராமரித்து பாதுகாத்து டிஜிட்டல் செய்து அனைவருக்கும் வழங்குவார்கள். 

அல்லது நீங்களே முறையாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வையுங்கள்; அல்லது என்னிடம் கொடுங்கள் அதை முறையாக பாதுகாப்பதற்கு ஆவணம் செய்கிறேன். 

உங்களிடம் உள்ள நூல் இஸ்லாம் குறித்து இருந்தாலும், இந்தியா குறித்து இருந்தாலும், தமிழ், அரபுத் தமிழ், ஆங்கிலம், உருது, அரபி போன்ற எந்த மொழிகளில் இருந்தாலும் அவற்றை வழங்குங்கள்; முறையாக பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோம். 

இறைவன் வேதங்களையும் அதை விளக்கிச் சொல்லும் தூதர்களையும் அனுப்பி வைத்தான். இன்று நம்மிடையே தூதர்கள் கிடையாது; வேதங்கள் மட்டுமே இருக்கின்றன. 

தூதர்களை காலம் கரைத்து விட்டாலும் வேதம், மக்களை வழிநடத்தும் என்பதற்காகத்தான் இறைவன் அருளினான். 

வேதங்களின் விரிவுரையாக வந்த நமது இஸ்லாமிய நூல்களை கவனக் குறைவாகவோ காலத்தால் அழிந்திடவோ விட்டுவிடாதீர்.

ஒரு நூலாசிரியரின் பெரும் முயற்சியாலும், பொருள் செலவாலும் நேரம் செலவிட்டும் உருவாக்கப்பட்ட நூல்களை, அந்த ஆசிரியரின் முயற்சியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஆவணம் செய்யுங்கள்.

எனது தொலைபேசி எண் : 
84282 79249

தொடரும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்