சூரியனையும் தாண்டி பூமியில் ஒளிரும் புனிதர்கள்

சூரியனையும் தாண்டி 
உலகில் ஒளிரும் மனிதர்கள் 
===============================

நேற்றைய தொடர்ச்சி.....44

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
===============================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

நமக்கு மத்தியில் வாழும் மனிதர்களில் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதற்கு ஏற்றவர்கள் இறைநேசர்கள் மட்டுமே !. 

அவர்கள் சுயநலம் இல்லாமல் வாழ்கிறார்கள். 

இறைநம்பிக்கை, சகிப்புத்தன்மை, நன்றி உணர்ச்சி, தியானம், சுயநலமின்மை, மன ஓர்மை முதலியவற்றால் அவர்களின் ஆன்மா ஒளிர்கிறது.

அவர்களின் தியானம் நாவில் தொடங்கி மனதில் முடிகிறது. 

அவர்களுக்கு மனவேதனைகள் கொடுக்கப்பட்டாலும் மக்களின் நலனையே விரும்பி செய்கிறார்கள். 

கவலைகள் இருந்தாலும் அவர்களின் முகம் களையுடன் காணப்படுகிறது.

உலக ஆசைகள் இருப்பவர்கள் அவர்களுக்கு  பிணங்களைப் போலவும், பிணிகளைப் போலவும் காட்சியளிக்கிறார்கள்.

அவர்களுக்கு இறைவனை அடைவதில் மட்டுமே கவனம் இருப்பதால், சொர்க்கத்தை கண்டு கொள்வதில்லை. 

அவர்களைப் பொருத்தமட்டில் சொர்க்கம் பாலடைந்த பங்களா, பயனற்ற தரிசு நிலம்.

அவர்களின் பார்வையில் நரகம் அணைக்கப்பட்ட சாம்பல் குவியல் போன்ற குப்பைமேடு. 

உலகமும் உலகச் செல்வங்களும் அவர்களிடம் எந்த மதிப்பும் பெறாதது!

அல்லாஹ்வை அடைவது மட்டுமே அவர்களின் இலட்சியமாக இருப்பதால் மனிதர்களும், உலகமும், செல்வமும் அற்பமாக தெரிகின்றன. 

இறைவனை அடைவதற்கு இந்த உலகம் தற்காலிக தங்குமிடம் என்பதால் அதை அனுபவித்து வருகிறார்கள். 

உடலுக்குள் ஆன்மா இருப்பதால் அவர்கள் தேகத்தை மதிக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் உடலின் குறுக்கீடு இல்லாமல் உள்ளத்தால் அல்லாஹ்வை தொடர்பு கொள்கின்றனர். 

"என்னை நீங்கள் நினைத்தால் உங்களை நான் நினைப்பேன்" என்று இறைவன் கூறுவது போன்று தன் உள்ளத்திலிருந்து இறைவனின் உள்ளத்தை தொட்டு விடுகின்றனர். 

"என்னை தியானிப்பவர்களுடன் நான் இருக்கிறேன்" என்று இறைவன் சொல்வதால் அதை அடையவே தன் வாழ்நாளை முழுமையாக செலவழிக்கிறார்கள்.

எனவே இத்தகைய இறைநேசர்களை கண்ணை மூடிக்கொண்டு நாம் பின்பற்றலாம்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்