ஆன்மீக ஒளியில் ஆலிம்களின் உயர்வு

ஆன்மீக ஒளியில் 
ஆலிம்களின் உயர்வு
============================== 

நேற்றைய தொடர்ச்சி......46

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

ஆலிம்களும் மாணவர்களும் நிறைந்த ஒரு சபையில் ஆற்றிய உரை. 

இந்த உபதேசம் ஆலிம்களுக்கானது மட்டுமல்ல! எல்லோருக்குமானது தான்!

ஆலிம்களே! மரணத்திற்கு பிறகு உயர் பதவி கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? அதற்கு தகுதியானதாக உங்கள் அமல் - நடத்தை இருக்கின்றதா? யோசித்துப் பாருங்கள்.!

ஆலிம்களே! உங்களுக்கு நான் புத்திமதி சொல்வது தவறாக தெரிவதால் நீங்கள் என்னை பகையோடு பார்க்கிறீர்கள். 

நான் உண்மையை சொல்ல அச்சப்படுவதில்லை; நான் பிறருடைய உபதேசத்தின் அடிப்படையிலேயே வளர்ந்திருக்கிறேன். அதனால்தான் என்னைப்போல் உங்களை உருவாக்க முனைகிறேன்.

ஆசைகளையும் சுயநலத்தையும் ஒழித்துவிட்டு எனது அறிவுரைகளை ஏற்று நடந்தால் உங்களுக்கு நன்மை உண்டு!

இறைவன், நபிமார்களுக்கு தனது வேதத்தைக் கொண்டும், இறைநேசர்களுக்கு ஞான உபதேசத்தை கொண்டும் பயிற்சி அளிக்கிறான்.

இறைநேசர்கள், நபிமார்களின் வாரிசுகளாக இருப்பதால் அவர்களின் உள்ளங்களில் இல்ஹாம் - ஞானத்தை அல்லாஹ் உற்பத்தி செய்கிறான்!

அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்களிடமும் நேரடியாக பேசினான். அவர்கள் புரிந்து கொண்டார்கள்; அவர்கள் புரிந்து கொள்வதற்கு வேறு எந்த ஒன்றின் துணையும் தேவைப்படவில்லை.

அதுபோலவே உங்களிடமும் இறைவன் பேச ஆசைப்படுகிறான்; அதற்கு உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலிம்களே! இறைநேசர்கள் மக்களிடம் ஊமைகளாகவும், செவிடர்களாகவும் இருக்கின்றனர். 

ஏனென்றால் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்று விட்டதால் அவர்களுக்கு மற்ற எந்த ஒன்றின் நெருக்கமும் தேவையில்லாமல் ஆகிவிடுகின்றது. 

அல்லாஹ்வின் தரிசன காட்சியில் ஒன்றிப்போய் விடுவதால் அவன் அல்லாதவற்றை அவர்கள் பார்க்க, கேட்க விரும்புவதில்லை. 

ஆனால் இறைநேசர்கள் தன்னைப்போல் அனைவரையும் ஆக்கிவிட வழி காட்டுகிறார்கள்.

திருக்குர்ஆன் ஓர் உறுதியான கயிறு! அது, அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தித் தரும் கருவி !

அதன் மூலம் அவன் நமக்கு வழி காட்டுகிறான்; அதன் மூலமாகவே நாம் நேர்வழி பெற வேண்டும்.

ஆலிம்களே! கெட்டவர்களின் சகவாசத்தை விட்டு விடுங்கள்; நல்லவர்களை நெருங்கி இருங்கள்.

உங்கள் உறவினரில், நண்பரில் ஒருவர் கெட்டவர் இருந்தால் அவரைவிட அன்னியனான நல்லவன் உங்களுக்கு உகந்தவன்! 

நல்லவர்களோடு இருப்பதே உண்மையான உறவு!

நல்லவர்கள் எனும் இறைநேசர்கள் இரண்டு பார்வைகளை பெறுகின்றனர். 

ஒன்று: இவ்வுலகில் இறைவன் படைத்திருப்பவற்றை புறக்கன்களால் பார்க்கிறனர். 

மற்றொன்று: இறைவன் வானத்தில் படைத்துள்ளவற்றை அக கண்களால் பார்க்கிறனர். 

இறைவன் இறைநேசர்களுடைய உள்ளத்தின் திரைகளை நீக்கிவிடுவதாலே அனைத்தையும் நேராகப் பார்க்கும் ஆற்றலை பெறுகிறார்கள். 

ஏனென்றால் அவர்கள்தான் அல்லாஹ்வின் நேசர்களாயிற்றே!

ஆலிம்களே! உள்ளத்து திரைகள் நீங்கி அல்லாஹுவை தரிசிப்பவர்களுக்கு வைரக்கல்லும் கருங்கல்லும் சமமானது தான்!

ஆலிம்களே! உங்களுடைய கஷ்டங்களை பிறரிடம் சொல்லாமல் மறைப்பது நன்மையான செயல்! 

சோதனைகள், நோய்கள், தர்மம் ஆகிய மூன்றையும் எப்பொழுதும் மறைத்தே வையுங்கள்!

நேர்மை, மன உறுதி, நன்னம்பிக்கை, துறவு, சபலம் இல்லாதவர்கள் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். 

அப்படித்தான் இப்ராஹீம் நபி நெருப்பு குண்டத்தில் இருந்தும், மூஸா நபி நைல் நதியில் இருந்தும் பாதுகாக்கப்பட்டார்கள்.

தொடரும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்