இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மனைவியர் & பிள்ளைகளின் விபரம்
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மனைவியர் & பிள்ளைகளின் விபரம்
நேற்றைய தொடர்ச்சி...52
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
நான்கு மனைவியர் :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
1. ஃபாத்திமா பின்த் ஷைகு இப்ராஹீம் (ரஹ் ஜீலான் நகரத்தில் பிறந்தவர்)
2. ஆயிஷா பின்த் ஷைகு அப்துல்லாஹ் ஸவ்மயீ (ரஹ்
பக்தாத் நகரத்தை சேர்ந்தவர்)
3. ஃபாத்திமா பின்த் முஹம்மது பின் அஹ்மத், (ரஹ்) இவர்களுக்கு உம்மு அப்துல்லாஹ் என்ற பட்டப் பெயரும் உண்டு; பக்தாத் நகரத்தை சேர்ந்தவர்)
நான்காவது மனைவியின் பெயர் ஆதாரபூர்வமாக எந்த நூலிலும் சொல்லப்படவில்லை; ஆனால் சில உருது மற்றும் ஃபார்ஸீ, ஆங்கில மொழி நூல்களில் கீழ்க்கண்டவாறு நான்கு பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
Sayyida Madina- சையிதா மதினா Sayyida Sadiqa- சையிதா சாதிகா Sayyida Mu’minah - சையிதா முஃமினா, Sayyida Mahboobah - சையிதா மஹ்பூபா.
ஃபார்ஸீ மொழி நூல்களில் சையிதா ஸைனப் (ரஹ்) என நான்காவது மனைவியின் பெயர் காணப்படுகின்றது.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு நான்கு மனைவியர் மூலம் 27 ஆண் பிள்ளைகளும், 22 பெண் பிள்ளைகளும் பிறந்துள்ளனர் என அவர்களுடைய மகனார் அப்துல் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
ஆக மொத்தம் 49 பிள்ளைகள் பிறந்தனர். ( சில அறிவிப்புகளில் 47 பிள்ளைகள் பிறந்தனர் எனவும் காணப்படுகிறது) அவர்களில் 27 ஆண் பிள்ளைகளின் பெயர் விபரம்.
1. அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)
2. அப்துல் ரஸ்ஸாக் (ரஹ்)
3. அப்துல் அஜீஸ் (ரஹ்)
4. அப்துல்லாஹ் (ரஹ்)
5. அப்துல் ஜப்பார் (ரஹ்)
6. அப்துல் கனி (ரஹ்)
7. அப்துல் கரீம் (ரஹ்)
8. அப்துல் சமது (ரஹ்)
9. அப்துல் ஹலீம் (ரஹ்)
10. அப்துல் ரஹ்மான் (ரஹ்)
11. ஈஸா (ரஹ்)
12. யூசுஃப் (ரஹ்)
13. யஹ்யா (ரஹ்)
14. அபூ ஹம்ஸா (ரஹ்)
15. ஸ்டாலின் (ரஹ்)
16. உஸ்மான் (ரஹ்)
17. மூஸா (ரஹ்)
18. முஹம்மது (ரஹ்)
19. முஹம்மதுல் அக்பர் (ரஹ்)
20. முஹம்மதுல் அஸ்கர் (ரஹ்)
21. அஹ்மத் (ரஹ்)
22. ஹஸன் (ரஹ்)
23. ஹுசைன் (ரஹ்)
24. ஹம்ஸா (ரஹ்)
25. முயீன் அல்லது மாநிவு (ரஹ்)
26. ஸஅதுத் தீன் (ரஹ்)
27. ஷறஃபுத்தீன் (ரஹ்)
சில நூல்களில் ஏதோ ஒரு பெயருக்கு பகரமாக அபூ ஸஅது என வருகின்றது. வேறு சில நூல்களில் வேறு சில பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன; அந்த பெயர்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் 35 க்கும் மேற்பட்ட பெயர்ச் சொற்கள் வரும்.
அதனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு 35 பிள்ளைகள் பிறந்துள்ளனர் என்று நாம் எண்ணக்கூடாது.
சில பிள்ளைகளின் பெயர்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அறிவித்திருக்கிறார்கள் என நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண் பிள்ளைகளின் பெயர்
28. பாத்திமா (ரஹ்)
29. ஆமினா (ரஹ்)
30. பாத்திமா ஸுகுரா (ரஹ்)
31. ஸைனப் (ரஹ்)
32. கதீஜா (ரஹ்)
33. ஸைனப் ஸுகுரா (ரஹ்)
34. கதீஜா ஸுகுரா (ரஹ்)
35. மரியம் (ரஹ்)
36. ஆயிஷா (ரஹ்)
37. ஸகினா (ரஹ்)
38. ஹலீமா (ரஹ்)
39. ருகையா (ரஹ்)
40. உமைனா (ரஹ்)
41. காமிலா (ரஹ்)
42. ஹமீதா (ரஹ்)
43. கஃப்ரா (ரஹ்)
44. ராபிஆ (ரஹ்)
45. நாயிலா (ரஹ்)
46. ஆலியா (ரஹ்)
47. ஃபர்வா (ரஹ்)
48. ஜவ்ஹரா (ரஹ்)
49. ஸஃபியா (ரஹ்)
ஒவ்வொரு மனைவிக்கும் பிறந்த பிள்ளைகளின் விபரம்:
•••• 1. ஃபாத்திமா பின்த் ஷைகு இப்ராஹீம் (ரஹ்) அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் என நம்பத் தகுந்த நூல்கள் சொல்லும் பெயர்கள்.
ஆண் பிள்ளைகள்:
1. அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)
2. அப்துல் ரஸ்ஸாக் (ரஹ்)
3. அப்துல் அஜீஸ் (ரஹ்)
பெண் பிள்ளைகள்:
4. பாத்திமா (ரஹ்)
5. ஆமினா (ரஹ்)
•••• 2. ஆயிஷா பின்த் ஷைகு அப்துல்லாஹ் ஸவ்மயீ (ரஹ்) அவர்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகள்:
6. அப்துல்லாஹ் (ரஹ்)
7. அப்துல் ஜப்பார் (ரஹ்)
பெண் பிள்ளைகள்:
8. ஸைனப் (ரஹ்)
9. கதீஜா (ரஹ்)
••••• 3. ஃபாத்திமா பின்த் முஹம்மது பின் அஹமத் அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள்:
10. அப்துல் கனி (ரஹ்)
11. அப்துல் கரீம் (ரஹ்)
12. அப்துல் ஸமது (ரஹ்)
பெண் பிள்ளைகள்:
13. மரியம் (ரஹ்)
14. ஆயிஷா (ரஹ்)
•••• 4. சையிதா ஸைனப் மனைவியின் ஆண் பிள்ளைகள்:
15. அஹமது (ரஹ்)
16. மும்மது அக்பர் (ரஹ்)
17. முஹம்மது அஸ்கர் (ரஹ்)
18. ஹம்ஸா (ரஹ்)
19. ஹஸன் (ரஹ்)
20. ஹுஸைன் (ரஹ்)
பெண் பிள்ளைகளின் பெயர்:
21. ஸஃபியா (ரஹ்)
22. ஃபர்வா (ரஹ்)
23. ஜவ்ஹரா (ரஹ்)
நான்கு மனைவியருக்கு பிறந்த 23 குழந்தைகள் மட்டும் எந்தெந்த மனைவியருக்கு பிறந்திருக்கிறார்கள் என்கிற தெளிவான, ஆதாரப்பூர்வமான வரலாறு நம்பத் தகுந்த நூல்களில் உள்ளது.
மற்ற 26 குழந்தைகள் எந்தெந்த மனைவியருக்கு பிறந்திருக்கிறார்கள் என்று தெளிவான ஆதாரப்பூர்வமான விபரங்கள் இல்லை.
ஆனால் உருது மற்றும் ஃபார்ஸீ நூல்களில் சில விபரங்கள் உள்ளது.
49 பிள்ளைகளில் தந்தையைப் போலவே பிரசித்தி பெற்று வாழ்ந்தவர்கள்
1. அப்துல் வஹ்ஹாப் ஃபிக்ஹ் சட்ட துறையில் ஆக சிறந்தவர்.
2. அப்துல் ரஸ்ஸாக் ஹதீஸ், தஃப்ஸீர், தஸவ்வுஃப் ஆகிய கலைகளில் கை தேர்ந்தவர்.
3. அப்துல் அஜீஸ் அவர்கள் சிரியாவில் மிகப்பெரும் ஷைகுவாக திகழ்ந்தார்கள்.
4. அப்துல் கரீம் தஸவ்வுஃப் கலையில் வல்லுநர்.
5. அப்துல் ஸமத் – மிகுந்த ஆன்மீக பயிற்சி பெற்றவர்.
6. முஹம்மது அல் அக்பர் – காதரிய்யா தரிகா பரவலுக்கு இவரே மிகப் பெரும் காரணமாக இருந்தார்.
7. முஹம்மது அல் அஸ்கர் கிலாஃபத் பெற்றவர்.
பெண்களில்:
1. ஸைனப் அவர்கள் பக்தாத் நகரத்தில் மிகப் பெரிய ஆலிமாவாக வழியாக ஷைகுவாக திகழ்ந்தார்கள்.
2. மரியம் அவர்கள் சூஃபி பயிற்சியில் உயர்வு பெற்று வாழ்ந்தார்.
3. ஆமினா அவர்கள் இறையச்சம் உடையவராகவும் மாபெரும் ஞானியாகவும் வாழ்ந்தார்கள்.
தொடரும்
Comments
Post a Comment