அல்லாஹ்வின் கையைப் பிடித்த அத்தார் (ரஹ்) அவர்கள்
அல்லாஹ்வின் கையைப்
பிடித்த அத்தார் (ரஹ்) அவர்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 100
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
அல் அக்பரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் நான் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்.
அப்போது நான் அவர்களிடம்,
“யா ரசூலுல்லாஹ்! என் கண்களில் வலி இருக்கின்றது; தயவுசெய்து தாங்கள் தங்களுடைய கைகளால் என் கண்களைத் தடவி விடுங்கள்” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களிடம் செல்லுங்கள்; அவர் உமது கண்களைத் தடவுவார்" என்று கூறினார்கள்.
அதை கேட்டதும் என் மனதில் “நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு, உலக மக்களில் ஒருவரிடம் செல்வத?” என்று எண்ணினேன்.
மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம்,
“யா ரசூலல்லாஹ்! நீங்கள்தான் என் கண்களைத் தடவி விடவேண்டும்” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
“நீங்கள் ஹதீஸை கேள்விப்பட்டதில்லையா?
‘ஒருவர் தர்மம் கொடுக்கும் போது, அது ஏழையின் கைகளில் சேரும் முன்பே அல்லாஹ்வின் கைகளில் சேர்ந்துவிடுகிறது’ என்று?”
“இந்த நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்)
அவர்களுடைய கை, அல்லாஹ்வின் கையுடன் கைகுலுக்கிய கை, (தர்மம் கொடுத்ததின் மூலம் அல்லாஹ்வின் கைகளை அடிக்கடி தொட்ட கை ) எனவே அவரிடமே செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
அந்தக் கனவிலிருந்து நான் விழித்தேன்; அப்பொழுதே நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களிடம் சென்றேன்;
அவர்கள் என்னை கண்டவுடன்
காலணியில்லாமல் எழுந்து வந்து,
“நீங்கள் கனவில் என்ன கண்டீர்கள்?”
என்று கேட்டார்கள்.
பின்னர் நான் விபரமாக சொன்னதும் அவர்கள் என் கண்களைத் தடவி விட்டார்கள். தடவி விடும்போது சூரத்துல் ஃபலக், சூரத்துந் நாஸ் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதினார்கள்; அதேநேரம் என் கண்களில் இருந்த வலி முழுவதும் நீங்கிவிட்டது.
நூல் : அல் முன்தழிம்
இவர் ஈராக்கின் ஹரான் பகுதியில் பிறந்து வாழ்ந்த பாரம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகான் ஆவார்.
ஹிஜ்ரி 600 கி.பி. 1200 காலகட்டங்களில் வாழ்ந்திருக்கிறார்; இவர் எழுதிய பல நூல்களில் ஒன்றுதான் அல் முன்தழிம். இது பல பாகங்களைக் கொண்டது.
நல்லெண்ணத்தோடு
அல்லாஹ்விற்காக வழங்கப்பட்ட தர்மம், மனிதனை அல்லாஹ்வின் அன்மைக்கு உயர்த்தும்; தர்மம் வழங்கிய கை, மற்றவர்களுக்கு மருந்தாகவும் மாறும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
நஸ்ர் பின் அல் அத்தார் (ரஹ்) அவர்களின் கை மந்திரக் கை அல்ல!
மருந்துத் தடவிய கையும் அல்ல!
தர்மம் செய்யப் பழகிய கை.
அதனால் வலியை குணமாக்கும் அருள் வளம் பெற்ற கை! தர்மம் செய்யுங்கள் அது உங்களின் தரத்தை உயர்த்தும்!
தொடரும்......
Comments
Post a Comment