ஸலவாத்தும் நல்ல சத்தியமும்...
ஸலவாத்தும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஷைகு அல் ஆரிப் அஸ்ஸய்யது அஹமது ஸாவி (ரஹ்) அவர்கள் தான் எழுதிய ஸலவாத் சம்பந்தமான ஒரு நூலில் கூறுகிறார்கள்.
தலாயிலுல் கைராத் எனும் நூல் ஆசிரியர் ஷைகு முஹம்மது பின் சுலைமான் அல் ஜஸூலீ (ரஹ்) அவர்கள் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது தொழுகை நேரம் வந்துவிட்டது. உளூ செய்வதற்கு தண்ணீரைத் தேடிச் சென்றார்கள். அப்பொழுது ஒரு இடத்தில் ஒரு கிணறு தென்பட்டது. ஆனால் அதிலிருந்து தண்ணீரை வெளியில் எடுப்பதற்கான எந்த உபகரணமும் இல்லை.
அச்சமயம் அருகில் இருந்த மேட்டில் நின்று ஒரு சிறுமி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஷைகு அவர்களைப் பார்த்து அந்தச் சிறுமி, "நீங்கள் யார்?" என்று கேட்டார்.
ஷைகு அவர்கள்
தன்னை பற்றி சொன்னார்கள். அப்பொழுது அந்த சிறுமி, "உங்களைக் குறித்து ஊரில் இருப்பவர்கள் புகழ்ந்து பேசிக் கொள்கிறார்கள்; ஆனால் இந்த கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியில் எடுப்பதற்கு குழம்பிப் போய் நிற்கிறீர்களே?" என்று சொன்னார்.
அச்சிறுமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கிணற்றில் இருந்த தண்ணீர் பொங்கி வழிந்தது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் ஓடியது.
ஷைகு அவர்கள் அந்தத் தண்ணீரில் உளூ செய்து கொண்டு, "இறைவன் மீது ஆணையாக உன்னிடத்தில் நான் கேட்கிறேன்! எனக்கு இவ்வளவு பெரிய உயர்வும், கண்ணியமும் எதனால் கிடைத்தது?" என்று கேட்டார்கள்.
அந்த சிறுமி சொன்னார். "நீங்கள் நம்பிக்கையோடு நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமாக ஸலவாத்து ஓதியதால் இந்த கண்ணியம் கிடைத்தது."
ஷைகு அவர்கள் கூறினார்கள். இறைவன் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்கள் குறித்து ஸலவாத்து சம்பந்தமான ஒரு நூலை எழுதுவேன்". அப்படி அவர்கள் எழுதியது தான்
நூல்: தலாயிலுல் கைராத்.
Comments
Post a Comment