அதிகாரம் இருந்தும் அடக்கமாகவும், அரசராக இருந்தும் அடியாராகவும்.....

அதிகாரம் இருந்தும் அடக்கமாகவும், 
அரசராக இருந்தும் அடியாராகவும்.....
<><><><><><><><><><><><><><><><><><>

அதிகமாக அள்ளிக் கொடு !
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 74

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

மன்னர் ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம், "ஹாரூனே! இந்த ஆட்சி அதிகாரம் உங்களிடம் வந்து சேரும்! எனவே நீங்கள் நடந்து சென்று ஹஜ் செய்யுங்கள்; 

போர்க்களங்களில் கலந்து கொள்ளுங்கள்; ஹஜ்ஜுக்கு செல்லும் போது இரண்டு ஹரம்களிலும் உள்ள மக்களுக்கு தாராளமாக ஸதக்கா செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

அவ்வாறே ஹாரூன் ரஷீத் (ரஹ்) அவர்கள் நடந்து சென்று ஹஜ் செய்தார்கள். இரண்டு ஹரம்களிலும் அளவுக்கு அதிகமான செல்வங்களை தர்மம் செய்தார்கள்.

இவருக்கு முன்பும், இவருக்குப் பின்பும் எந்த அரசரும் நடந்து சென்று ஹஜ் செய்ததில்லை; இவர் கலீஃபாக்களில் மிகச்சிறந்தவராக இருந்தார். 

நூல்: தாரீஹுல் குலஃபா 

இஸ்லாமிய வரலாற்றில் மிகச்சிறந்த கலீஃபாவாக போற்றப்படுகிறவர்களில் ஒருவர் ஹாரூன் ரஷீத் (ரஹ்) ஆவார். 

இவர் பதவிக்கு வரும் முன்னரே நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்திருப்பது தான் தனிச்சிறப்பு.

கி. பி.  786 - 809 ஹிஜ்ரி 170 - 193 காலகட்டத்தில் பக்தாதை தலைமை இடமாகக் கொண்டு ஈராக், சிரியா, பாலஸ்தீன், ஹிஜாஸ், எகிப்து, ஈரான், மத்திய ஆசியாவின் சில பகுதிகள், எமன் ஆகிய மிகப்பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்த அப்பாஸியா கலீஃபா ஆவார்.

பக்தாத்தில் இருந்து மக்காவிற்கு சுமார் 1400 கிலோ மீட்டர் ஆகும்; பாலைவனத்தில், கடும் வெப்பத்தில் ஒரு அரசர்  அதிகாரம் இருந்தும் அடக்கமாகவும், அரசராக இருந்தும் அடியாராகவும் ஹஜ் செய்த மாபெரும் இறைநேசர் ஆவார்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்