நபிகள் நாயகம் கிப்லா வைத்த பள்ளிவாசல் இன்றும்
நபிகள் நாயகம்
கிப்லா வைத்த பள்ளிவாசல் இன்றும்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 77
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
அபுல் அப்பாஸ் அஹ்மத் பின் தூலூன் ( முழு நிலவு) (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 220 - 270 கி.பி. 835 - 884 காலகட்டத்தில் எகிப்தின் ஆளுநராக பதவி வகித்தார்.
தூலூனியா எனும் பெயரில் பாரம்பரியமான ஓர் அரசை நிறுவினார்; இவருடைய ஆட்சியின் தலைநகரமாக அல் கத்தாயிவு நகரம் இருந்தது.
இந்த நகரம் எகிப்து நாட்டின் தென் கெய்ரோவில் ஸய்யிதா ஸைனப் மாவட்டத்தில் இருக்கின்றது. அரசியல் காரணங்களால் பின்னால் ஆட்சி பொறுப்புக்கு வந்த அப்பாஸியா ஆட்சியாளர்கள் அந்த நகரை ஹிஜ்ரி 292 க்கு பிறகு திட்டமிட்டு அளித்தார்கள். ஆனாலும் இன்று இந்த நகரம் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இவர் தனது ஆட்சி காலத்தின் ஹிஜ்ரி 266களில் ஒரு பள்ளிவாசலை கட்டினார்; அந்த பள்ளிவாசல் உடைய கிப்லா மிஹராப் பகுதி சற்று குறுகலாக இருந்தது; அதை சிலர் குறை கூறினார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் ஜும்ஆ பிரசங்கத்தின் போது அஹ்மத் பின் தூலூன் (ரஹ்) அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்;
அப்பொழுது அவர்கள், ‘அஹ்மதே! இந்த பள்ளிவாசலின் கிப்லா எப்பொழுதும் இவ்வாறே இருக்க வேண்டும்" என்று கூறி, தரையில் ஒரு கோட்டை போட்டுக் காட்டினார்கள்.
அதற்கு பிறகு நான் அதில் எதையும் கூட்டவும் இல்லை; குறைக்கவும் முடியவில்லை. நான் காலையில் எழுந்து வந்து அதை பார்த்தபோது, அந்த கோட்டைச் சுற்றிலும் எறும்புகள் சூழ்ந்து இருந்தது.
அதே இடத்தில் நான் மிஹ்ராபுடைய அடித்தளத்தை அமைத்து இந்தப் பள்ளிவாசலை கட்டி முடித்து இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
நூல் : பதாயிவுஸ் ஸுஹூர் ஃபீ வகாயிஇத் துஹூர்,
இந்த நூல் ஹிஜ்ரி 930 / பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இந்த நூல் எகிப்தின் வரலாற்றை விரிவாக சொல்லும் ஒர் ஆய்வு நூல்.
நிரப்பமான மார்க்க அறிவு பெற்ற அஹ்மத் பின் தூலூன் (ரஹ்) அவர்கள் மிகவும் நீதமான அரசராக இருந்து ஆட்சி செய்தார்; மார்க்க அறிஞர்களை மிகவும் மதித்து வாழ்ந்தார்.
ஹிஜ்ரி 263 - 266 காலகட்டத்தில் மூன்று வருடங்கள் தொடர்ந்து செய்யப்பட்ட முயற்சியால் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது.
எகிப்தினுடைய மிகப்பழமையான பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. அல் கத்தாயிவு எனும் பெயரில் பழைய நகரம் இன்று இல்லை என்றாலும் 'ஸய்யிதா ஸைனப்' எனும் நகரம் உள்ளது. இது இன்று தனி மாவட்டமாக இருந்து செயல்பட்டு வருகிறது.
மஸ்ஜித் அஹ்மத் பின் தூலூன் எனும் பெயரில் இந்தப் பள்ளிவாசல் இன்றும் கம்பீரமாக நிற்கின்றது. இந்த இடம் இன்று சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இந்தப் பள்ளிவாசல் ஆறறை ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஒரு மினாராவும் ஒரு குப்பாவும் உள்ளது. இந்தப் பள்ளிவாசல் ஒரு மலையின் மேல் உள்ள ஒரு பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது.
மிகவும் சரியான சதுர வடிவில் அமையப்பெற்றுள்ளது. ஒரு லட்சத்து இருபது ஆயிரம் தீனார் செலவில் இந்த பள்ளிவாசல் அன்று கட்டப்பட்டது.
மேலும் விவரமாக அறிய....
Comments
Post a Comment