நீ எகிப்தை ஆளுவாய்! தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய்

நீ எகிப்தை ஆளுவாய்! 
தாத்தாரியர்களை விரட்டி அடிப்பாய்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13

தொடர்: 79

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
•|•
•|•
•|•
•|•
•|•

அமீர் அல் பர்தஜ்ஜானி அவர்கள் கூறுவதாவது;

அல் முழஃப்பர் ஸைஃபுத்தீன் குத்ஸ் அவர்களிடம் எனது சிறு வயதில் நான் பணியாளனாக இருந்தேன்.

அப்போது அவருடைய தலையில் அதிகமான பேன்கள் இருந்தது; அவருடைய தலையை சீவி ஒவ்வொரு முறையும் ஒரு பேனை கொல்லும் போது ஒரு நாணயத்தையோ அல்லது அதைவிட குறைவாகவோ கேட்பேன்; எனக்கு அவர் வழங்கிக் கொண்டே இருப்பார்.

இவ்வாறு ஒரு நாள் அவருடைய தலையை நான் சீவிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னேன்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு ஐம்பது வீரர்களின் (ஒரு பட்டாலியன் ) தளபதி பதவி வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

உடனே அவர், " உன் என்னபடி அல்லாஹ் நனவாக்கட்டும்! நிச்சயமாக உனக்கு ஐம்பது வீரர்களுக்கான தளபதி பதவியை வழங்குகிறேன்; அது குறித்து ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினார்.

"அட நாசமா போக! எனக்கு நீங்கள் ஐம்பது வீரர்களுக்கான தளபதி பதவியை வழங்குவதா?" என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர், "உண்மைதான்! கண்டிப்பாக உனக்கு தளபதி பதவி தருவேன்" என்று கூறினார்.

"அது எப்படி சாத்தியம்?" என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர், "நிச்சயமாக நான் ஒரு நாள் எகிப்து நாட்டை ஆளுவேன்; மங்கோலியரை அடித்து விரட்டுவேன்; அப்பொழுது நீ கேட்ட அந்த பதவியை நான் உனக்கு வழங்குவேன்" என்று கூறினார்.

நான் அவரிடம், "நீங்கள் என்ன பைத்தியமா? உமது தலையில் உள்ள பேனை கூட கட்டுப்படுத்த முடியாத நீங்கள், எகிப்து நாட்டை ஆளப்போகிறீரா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், "ஆம்! நான் ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம், " நீ எகிப்தை ஆளுவாய்! மங்கோலியர்களை அடித்து விரட்டுவாய்" என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் சொல் சந்தேகமின்றி நடைமுறைக்கு வரும்" என்று கூறினார். பிற்காலத்தில் அவ்வாறே அந்த கனவு நனவானது.

நூல் : அல் பிதாயா வந்நிஹாயா

சுல்தான் ஸைஃபுத்தீன் குதுஸ் அவர்கள் ஹிஜ்ரி 657 - 658 / கி.பி. 1259 - 1260 காலத்தில் சுமார் 14 மாதங்கள் ஆட்சி செய்தார். இவர் பொறுப்புக்கு வந்த பிறகுதான் மங்கோலியர்களை விரட்டி அடித்தார். இவர் மம்லூக் வமிசத்தை சேர்ந்த ஒரு அரசர் ஆவார்.

இவர் இளம் வயதில் கண்ட கனவை நம்பிக்கையோடு நம்பி இருந்து, நம்பியது போலவே அரசராகவும் ஆகியிருக்கிறார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்