மரணத்திற்குப் பிறகும் வாக்கை காப்பாற்றும் வாய்மையாளர்!

மரணத்திற்குப் பிறகும் வாக்கை காப்பாற்றும் வாய்மையாளர்!
<=><=><=><=><=><=><=><=><=><=><=>

அல்லாஹ் உனக்கு 
ஆரோக்கியம் தருவானாக!
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11

தொடர்: 102

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

 
இப்னு அபீ தய்யிப் அல் ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “எனக்கு பத்து ஆண்டுகளாக செவிட்டுத்தன்மை இருந்தது ( அதனால் பிறர் பேசுவதை என்னால் கேட்க இயலாது; இந்நிலையில்) நான் ஒருமுறை மதீனாவிற்கு சென்றிருந்தேன். 

நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் மிம்பருக்கும் இடையில் ஒரு இரவு உறங்கினேன்; அப்போது கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன். 

நான் நபிகளாரிடம், "யா ரசூலல்லாஹ்! நீங்கள், 'என்னை முன்னிறுத்தி  அல்லாஹ்விடத்தில் “வஸீலா” கேட்பவருக்கு என் ஷஃபாஅத் கட்டாயம் உண்டு" என்று நீங்கள் சொல்ல வில்லையா?" என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது அப்படிதான்! அல்லாஹ் உமக்கு நலமளிப்பானாக (عافاك الله)" என்று கூறினார்கள்.

இப்னு அபீ தய்யிப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “நபி (ஸல்) அவர்கள் சொன்ன ‘அல்லாஹ் உமக்கு நலமளிப்பானாக!' என்ற சொல்லின் பரக்கத்தால், எனது செவிட்டுத்தன்மை முற்றிலும் நீங்கிவிட்டது.”

நூல் : அல் பிதாயா வந்நிஹாயா 

மரணத்திற்குப் பிறகும் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஒரே மனிதர், மனித இனத்தில் இருக்கிறார் என்றால் அவர் நபிகள் நாயகம் அவர்கள் மட்டும்தான்! 

எனக்கும், என் குடும்பத்தினருக்கும், என்னை அறிந்த அனைவருக்கும், இதை வாசிக்கிற அனைவருக்கும் நபிகள் நாயகத்தின் ஷஃபாஅத்  அல்லாஹ்வின் பெரும் கருணையின் பொருட்டால் கிடைக்கட்டுமாக!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்