அவர் கையை கழுவி விடுங்கள்

அவர் கையை கழுவி விடுங்கள் 
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 99

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

அபூ ஜஃபர் அல் ஸைதலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;

ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்களைச் சுற்றி பல ஏழை எளியவர்கள் கூட்டமாக அமர்ந்து இருந்தார்கள்.

அச்சமயம் திடீரென வானம் இரண்டாகப் பிளந்தது; அதிலிருந்து இரண்டு மலக்குகள் இறங்கி வந்தார்கள்; அவர்களில் ஒருவரின் கையில் ஒரு குண்டான் பாத்திரமும், மற்றொருவரின் கையில் ஒரு நீர் ஊற்றும் பாத்திரமான ஜக்கும் இருந்தது.

இரு வானவர்களில் ஒருவர் தன் கையிலிருந்த பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைத்ததும் மற்றொருவர் தண்ணீரை ஊற்றினார்; நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் கழுவிக் கொண்டார்கள்.

மேலும் அங்கு பல ஏழை மனிதர்கள்  இருந்தார்கள்; அவர்களும் 
ஒருவர் பின் ஒருவராகக் தமது கைகளைக் கழுவினார்கள்.

அதன் பின்னர் அந்த பாத்திரத்தை என் முன் வைத்தார்கள்; நான் என் இரு கைகளையும் கழுவ முனைந்த போது ஒரு வானவர் மற்றொருவரிடம்,
"இவருடைய கைகளில் நீர் ஊற்ற வேண்டாம்; இவர் ஏழைகளில் ஒருவர் அல்ல" என்று கூறினார்.

இதைக் கேட்ட நான் மனம் உடைந்து,
நபி (ஸல்) அவர்களிடம், "யா ரசூலல்லாஹ்! ஒருவன் யாரை நேசிக்கிறானோ, அவன் அவர்களுடனே இருப்பான்” என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்களே?" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், "ஆம், அது உண்மைதான் " என்று பதிலளித்தார்கள்.

உடனே நான், "யா ரசூலல்லாஹ்!
நான் உங்களை நேசிக்கிறேன்;
இந்த ஏழை மனிதர்களையும் நேசிக்கிறேன்" என்று கூறினேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் மலக்குகளிடம், "இவருடைய கைகளிலும் தண்ணீர் ஊற்றுங்கள்;
இவரும் இவர்களில் ஒருவர்தாம்"
என்று கூறினார்கள். 

நூல்: ஷதராதுத் தஹப் ஃபீ அக்பாரி மினந் தஹப்

யார் யாரை நேசிக்கிறாரோ அவர் அவருடன் சொர்க்கத்தில் இருப்பார் எனும் வார்த்தை வெற்று வார்த்தை அல்ல! அது ஆன்மீகத்தின் உச்ச நிலையை உணர்த்தும் வார்த்தை. 

கைகளை கழுவுதல் என்பது உள்ளம் சுத்தமாக இருப்பதின் அடையாளமாகும். ( ஒரு புகைப்படத்தை அழித்தி விட்டேன்)

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்