நபிகள் நாயகம் எனக்கு 100 தீனார் கொடுத்தார்கள்

98.  நபிகள் நாயகம் அவர்கள் 
எனக்கு 100 தீனார் கொடுத்தார்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 12 

தொடர்: 98

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

மதீனத்துல் முனவ்வராவின் வரலாற்றைப் பதிவு செய்த "அத் துஹ்ஃபதுல் லதீஃபா ஃபீ தாரீகில் மதீனதிஷ் ஷரீஃபா" என்ற நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

“நான் முழுமையாக நம்பும் ஒருவரிடமிருந்து எனக்கு இந்த செய்தி அறிவிக்கப்பட்டது.

மதீனாவில் உள்ள ஷம்ஸ் ஸவாப் அல் முகீசீ  (ரஹ்) அவர்களுக்கு மக்காவிலிருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில், 'அஸ் ஸுபைர் பின் அலீ பின் ஸய்யிதி அல் குல்' (ரஹ் ) என்பவருக்கு நூறு திர்ஹம் வழங்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று அல் முகீசீ (ரஹ்) அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் முகீசீ (ரஹ்) அவர்களிடம் ஐம்பது திர்ஹம் மட்டுமே இருந்தது. அதனால், அவர் அந்த ஐம்பது திர்ஹத்தை மட்டும் ஜம்மால் அல் மதரீ என்பவரிடம் கொடுத்து, 'இப்னு ஸய்யிதி அல் குல் (ரஹ்) அவர்களிடம் வழங்கிடும்படி கொடுத்து அனுப்பினார்கள்.

அந்த ஜம்மால் அவர்கள்,
நல்லவர்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ளவர்; நல்ல மனிதர்.

அவர் அந்த ஐம்பது திர்ஹங்களை எடுத்துச் சென்றபோது, அதை பெற்றுக் கொண்ட இப்னு ஸய்யிதி அல் குல் (ரஹ் ) அவர்கள், “இதே அளவு இன்னும் தர வேண்டுமே?அதையும் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்; அதுமட்டுமின்றி அந்தப் பணத்தை அவரிடமே கொடுத்தனுப்பி விட்டார். 

ஜம்மால் அவர்கள் மீண்டும் முகீசீ (ரஹ்) அவர்களிடம் வந்து,
நடந்ததை கூறினார்.

அதற்கு முகீசீ (ரஹ்) அவர்கள், இப்னு ஸய்யிதி அல் குல் (ரஹ் ) அவர்கள் உண்மையையே சொன்னார்கள்;
மொத்தம் நூறு திர்ஹம்தான் நான் கொடுக்க வேண்டும்;

ஆனால்  இப்போது என்னிடம் முழுமையாக இல்லாததால் இருப்பதை கொடுத்து அனுப்பினேன்; பிறகு எனக்கு பணம் கிடைக்கும் போது மிதத்தை கொடுக்கலாம் என இருந்தேன்" என்று கூறினார்.

இதனை கேட்டுக்கொண்ட ஜம்மால் அவர்கள் மீண்டும் அந்த இப்னு ஸய்யிதி அல் குல் (ரஹ் ) அவர்களிடம் சென்று முகீசீ (ரஹ்) அவர்கள் கூறியதை எடுத்துச் சொன்னார்.

அப்போது அந்த ஷைகு அல் ஸய்யிதீ அல் குல் (ரஹ்) அவர்கள்  "அதைத்தான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே?" என்று கூறினார்கள்.

அதற்கு ஜம்மால் அவர்கள்,
“இது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

அதற்கு ஷைகு அல் ஸய்யிதீ அல் குல் (ரஹ்) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களை கனவில்  கண்டேன்;
என் சூல்நிலை, என் வறுமை ஆகியவற்றை அவர்களிடம் முறையிட்டேன்;

அப்போது அவர்கள் எனக்கு நூறு திர்ஹங்கள் வழங்கினார்கள்;
நீங்கள் எனக்கு ஐம்பது திர்ஹம் கொண்டு வந்தபோது, அந்த கனவு உண்மை என்பதை புரிந்து கொண்டு மீதியைக் கேட்டேன்;
எனவே என்னை குற்றம் சொல்லாதீர்கள்" என்று கூறினார்கள். 

நூல் : அத் துஹ்ஃபதுல் லதீஃபா ஃபீ தாரீகில் மதீனதிஷ் ஷரீஃபா

தன் வறுமை நிலையை அல்லாஹ்விடமும் ரசூலிடமும் ஒப்படைத்துவிட்டு மதீனாவில் வாழ்ந்து வந்தவருக்கு  உதவி செய்ய அல்லாஹ் மக்காவில் ஒருவரை தேர்ந்தெடுத்தான்.

அவரின் கனவில் நபிகள் நாயகம் அவர்கள் தோன்றி இன்னவருக்கு 100 திர்ஹம் கொடுத்து விடுங்கள் என உத்தரவிட்டிருக்கிறார்கள். 

ஆனால் அவர் பணத்தைக் கொடுத்து அனுப்பாமல் தன் தொழில் பார்ட்னருக்கு ஒரு கடிதத்தை மட்டும் எழுதி இன்னவருக்கு நூறு திர்ஹம் கொடுத்து விடுங்கள் என எழுதிவிட்டார். 

அவரிடம் அந்த நேரத்தில் அந்தத் தொகை இல்லாமல் சிரமப்பட்டதால் இந்த செய்தி வெளியில் வந்திருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

எனவே சிரமப்படுகிறவர்களுக்கு சரியான நேரத்தில் தேவையானதை அல்லாஹ் வழங்குவான் என்கிற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இந்த வரலாறு உணர்த்துகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்