எழுந்திரு… நபிகள் நாயகம் வந்திருக்கிறார்கள்

எழுந்திரு… 
நபிகள் நாயகம்  வந்திருக்கிறார்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 98

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

அபுல் கைர் அத்தியானத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;

நான் ஒருமுறை நபிகள் நாயகம்  அவர்களின் நகரமான மதீனாவிற்கு வந்திருந்தேன். அப்போது நான் மிக மிக வறுமையில் இருந்தேன். ஐந்து நாட்கள் அங்கே தங்கி இருந்தேன்;
சாப்பிடுவதற்கு ஒரு கவளம் உணவுகூட கிடைக்கவில்லை.

பின்னர் நான் நபி (ஸல்) அவர்களின் கப்ரு அருகே சென்று  அங்கே நபி (ஸல்) அவர்களுக்கும், அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கும், உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறினேன்.

பின்னர் நான்  “யா ரஸூலல்லாஹ்!
இன்று இரவு நான் உங்களின் விருந்தாளி” என்று சொல்லிவிட்டு
மிம்பரின் (பிரசங்க மேடைக்கு) பின்னால்  படுத்து உறங்கினேன்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; நபிகளாரின் வலதுபுறத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும், இடதுபுறத்தில் உமர் (ரலி) அவர்களும், முன் புறத்தில் அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்களும் நின்று இருந்தார்கள்.

அலி (ரலி) அவர்கள் என்னை மெதுவாக தட்டி எழுப்பி, “எழுந்திரு…
நபி (ஸல்) அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.

உடனே நான் எழுந்து, நபிகள் நாயகம் அவர்களின் அருகே சென்று,
அவர்களின் கண்களுக்கு நடுவே முத்தமிட்டேன்.

அப்போது அவர்கள் எனக்கு ஒரு ரொட்டித் துண்டை கொடுத்தார்கள்; அவர்களின் முன்னிலையிலேயே 
அதில் பாதியை நான் சாப்பிட்டேன்; பின்னர் நான் விழித்துக் கொண்டேன்.

விழித்துப் பார்த்தால், என் கையில் பாதி ரொட்டி உண்மையிலேயே இருந்தது; பசியும் முழுமையாக தீர்ந்திருந்தது. 

நூல் : இஹ்யா உலூமித்தீன்
ஐந்து நாட்களாக பசியிலிருக்கும் ஒருவர் யாரிடமும் உதவி கேட்காமல் இருந்திருக்கிறார் என்றால் அவரின் பத்தினித்தனத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தம் பசியை அல்லாஹ் மற்றும் ரசூலிடம் கூட சொல்ல வெட்கப்பட்டுதான் ஐந்து நாட்களை கழித்திருந்தார்; பின்னர் வேறு வழியில்லாமல் நபிகளாரிடம் அடைக்கலம் தேடிய போது நபிகளார் நிவாரணம் அளித்தார்கள். 

அவரின் பசிக்கு உணவு கிடைத்ததை விட நபிகளாரை கண்டது உணவை விட சிறந்ததாக அமைந்தது. 

எனவே பொதுமக்களாகிய நாம் சிரமங்கள் ஏற்படும் போது பொதுமக்களை நாடுவதற்கு முன் இறைவனுடைய வாசலை தட்டிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்