நமது அமைதி நமக்கு சமாதி !!
நமது அமைதி
நமக்கு சமாதி
50 தொழிலாளர்களுக்கு மேலாக தொழிலாளர்களை வைத்துள்ள இஸ்லாமிய நிறுவனத்தினரும்,
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் மாநில, மாவட்ட, வட்ட, நிர்வாக அலுவலகங்களிலும்,
சிறிய, பெரிய அனைத்து பள்ளிவாசல்களிலும்,
ஆண்கள் மதரஸா ,
பெண்கள் மதரஸா ,
இஸ்லாமியர்கள் நடத்தும் தங்கும் விடுதிகள், சூழ்நிலைகளும் வசதி வாய்ப்புகளும் இருந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் வசிக்கிற தெருக்களிலும்
குடியரசுதின கொடியேற்று விழா
நடத்த வேண்டும்.
நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தையும்,
நமது முன்னோர்கள் வடிவமைத்த மூவர்ண தேசியக் கொடியையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இது,
இஸ்லாமியர்களாலே சாத்தியமானது என்பதை சப்தமிட்டு சொல்ல வேண்டும்.
நமது அமைதி
நமக்கு சமாதி!
இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்ட, உழைத்த நமது மூத்த முன்னோர்களை வாசியுங்கள். நேசியுங்கள். நினைத்துப் பாருங்கள்.
நமது சுதந்திர போராட்ட தியாகிகளை பற்றியத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால், முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள்.
உங்கள் குடும்பத்தினரிடையே பகிர்ந்துகொள்ளுங்கள்.
கண்டிப்பாக,
நீங்கள் நேராக பேசுங்கள்.
வாட்ஸ்அப், முகநூல் வழியாக செய்திகளை மடை மாற்றி விட்டு மகிழ்ச்சி அடையாதீர்கள்.
கூகுளில் ஒரு முஸ்லிம்
தேசிய கொடியை ஏற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று கூட இல்லை.
அதை முதலில் பதிவேற்றுங்கள்.
வலைத்தள அனுபவசாலிகள்,
கூகுளின் முதல் பக்கத்தில்
இடம் பெறும்படியாக
நமது இஸ்லாமிய சகோதரர்கள், அரசியல், ஆன்மிக தலைவர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
இச்செயலில் இருந்து
உங்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்துங்கள்.
அன்புடன்
மவ்லவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
24/1/2022
Comments
Post a Comment