இந்திய குடியரசு தின வரலாறு
இந்திய குடியரசு தின வரலாறு
==============================
அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினம். (Republic Day)
அனைவருக்கும்
77 வது குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்.
இந்திய நாடு சுதந்திரத்தை நோக்கி நெருங்கி கொண்டிருந்தபோது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் பணியை 9/12/1946 திங்கள் கிழமை அன்றே அன்றைய தலைவர்கள் தொடங்கிவிட்டார்கள்.
அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியாவிற்குத் தேவையான அரசியல் சட்ட வரையறைகளை நிர்ணயிக்கும் சபை உருவாக்கப்பட்டுவிட்டது.
15/8/1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசியலமைப்பு சபை (Constituent Assembly of India) 299 பிரதிநிதிகளை கொண்டு 29/ 8 / 1947 வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்தான் இந்த அமைப்பு சபையின் தலைவராக இருந்தார்கள்.
அதேநேரம் வரைவு குழு தலைவராக டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
299 உறுப்பினர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 10 பேர் ஆவர்; இதில் பெண்கள் 15 இருந்தனர்; முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஆவர்.
முஸ்லிம்களின் பெயர் விபரம்.
=============================
1. மௌலானா அபுல் கலாம் ஆசாத் உத்திரப் பிரதேசம்
2. பேகம் இஜாஸ் ரஸூல் (பெண் உறுப்பினர் உத்திரப் பிரதேசம்)
3. பீ. போக்கர் சாஹிப் பகதூர் / கேரளா
4. ஹஜ்ரத் மொஹானி / உத்திரப் பிரதேசம்
5. மௌலானா முஹம்மது சஅதுல்லாஹ் / அசாம்
6. காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் /தமிழ்நாடு
7. முஹம்மது தாஹிர் /பீகார்
8. முஹம்மது உஸ்மான் தமிழ்நாடு
9. நவாப் முஹம்மது இஸ்மாயில் கான் / உத்திரப் பிரதேசம்
10. ஷேக் முஹம்மது அப்துல்லாஹ ஜம்மு காஷ்மீர்
11. ஸய்யித் மஹ்மூத் / பீகார்
அரசியல் அமைப்பு சட்டங்களை அந்த குழுவினர் எழுதி முழுமைப்படுத்தியது 26 நவம்பர் 1949 சனிக்கிழமை ஆகும்.
பின்னர் அதை பரிசீலனைகளும் விவாதங்களும் செய்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் 26 ஜனவரி 1950 வெள்ளிக்கிழமை ஆகும். இதையே இந்திய குடியரசு தினம் என்று நாம் அழைக்கின்றோம்.
அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட்டவர்கள் 284 உறுப்பினர்கள் மட்டுமே ஆவார்; சிலர் மரணித்து விட்டார்கள்; சிலர் ராஜினாமா செய்து விட்டார்கள். சட்டம் நடைமுறைக்கு வந்த போது இருந்த அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.
காயிதே மில்லத் :
===================
திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் பயணித்தார்; பின்னர் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்து மிகத் தீவிரமாக செயல்பட்டார்.
1946–1950 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற Debates & Discussionsல், குறிப்பாக Article 29, 30, 25, 26 போன்ற சட்டப் பகுதிகளில் மதப் பள்ளிகள், மகளிர் கல்வி, சிறுபான்மையினர் கல்வி, அவர்களின் உரிமைகள், பர்சனல்லா - சமூக சட்டங்கள் குறித்து மிக நீண்ட கருத்துக்களை முன் வைத்தார். அவை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
சர் முஹமது உஸ்மான்
=======================
1884 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் திருமணப்பூர் கிராமத்தில் பிறந்த சர் முஹம்மது உஸ்மான் அவர்கள் மிகப்பெரும் பட்டதாரியாகவும் அரசியல் தலைவராகவும், ஆளுநராகவும், Governor of Madras) – 16 மே 1934 – 16 ஆக 1934 இருந்தார்.
1 பிப்ரவரி 1960 அன்று சென்னையில் காலமானார். இவரது பெயரை தான் சென்னை டி. நகரில் உள்ள ஒரு சாலைக்கு உஸ்மான் ரோடு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment