இல்லை' என்பதைச் சாப்பிடு; 'இல்லை' என்பதைக் குடி !

'இல்லை' என்பதைச் சாப்பிடு; 
'இல்லை' என்பதைக் குடி ! 
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11

தொடர்: 101

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் கடுமையாக நோயுற்றிருந்தார்கள். இந்நிலையில் ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார்கள்.

ஹஸன் (ரஹ்) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உன் நோயிலிருந்து நலமடைய விரும்பினால், ‘இல்லை’ என்பதைச் சாப்பிடு; ‘இல்லை’ என்பதைப் பருகு” என்று கூறினார்கள்.

கனவிலிருந்து விழித்த ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள், இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்களிடம் பத்தாயிரம் திர்ஹங்களை கொடுத்தனுப்பி, “இதை ஏழைகளுக்குப் பகிர்ந்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தக் கனவின் பொருள் என்ன என்று கேட்டு வரும்படி ஒருவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர் சென்று விபரங்களை சொன்னதும் இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் சொன்ன ‘இல்லை… இல்லை…’ என்பதன் பொருள் ஜைதூன் / ஆலிவ் தான். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் ‘கிழக்குமல்ல, மேற்குமல்லாத ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆலிவ் மரம்’ என்று குறிப்பிடுகிறான்" 

يُوقَدُ مِن شَجَرَةٍ مُّبَارَكَةٍ زَيْتُونَةٍ لَّا شَرْقِيَّةٍ وَلَا غَرْبِيَّةٍ ۚ 

(அந்நூர் : 35) என்று கூறினார்கள்.

ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; “அதற்கு பிறகு நான் ஆலிவ் பழத்தைச் சாப்பிட்டு வந்தேன்; ஆலிவ் எண்ணெயை  அருந்தினேன்;
நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்றியதாலும், அவர்களைக் கனவில் கண்டதை பாக்கியமாக கருதியதாலும்  அல்லாஹ் எனக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளித்தான்”.

நூல் : அல் பிதாயா வந்நிஹாயா

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு பணிவுடன் இணங்கும் போது,
அது உணவாக மட்டுமல்ல;
அல்லாஹ்வின் அனுமதியால் மருந்தாகவும் மாறுகிறது.

ஹஸன் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் 140 - 210 காலகட்டத்தில் ஈராக் கூஃபா பகுதியில் வாழ்ந்த ஸாலிஹான நல்ல மனிதர் ஆவார்.

இமாம் சுஃப்யான் அஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி  97 – 161 கூஃபா, மக்கா, மதீனா, பஸ்ரா போன்ற பகுதியில் வாழ்ந்த பிரபலமான ஃபிக்ஹு மார்க்கச் சட்ட வல்லுநர் ஆவார்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்