நான் ஆணையிட்டால்....

நான் ஆணையிட்டால், 
அது கீழ்ப்படிகிறது
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11

தொடர்: 105

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) மிகவும் ஏழ்மையானவர், இவர் தனது கனவில்  நபி (ஸல்) அவர்களைக் கண்டார். ( அந்தப் கனவின் காட்சி)

ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்கள் மிகப்பெரிய வெட்ட வெளியில் நின்றிருந்தார்கள்; அவர்களைச் சுற்றி, நேர்மையான அவர்களது தோழர்கள் ஒரு குழுவாகவும், தூய்மையான அவர்களது குடும்பத்தினர் ஒரு கூட்டமாகவும் நின்றிருந்தனர்.

அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்களிடம் ஏதோ பேசினார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்; ஷைக் அலி அல் கத்தாரி (ரஹ்) அவர்கள் அங்கு கூடி இருந்த தம் மக்களிடம் மறுமையின் சில காட்சிகளை சொல்லி அச்சமூட்டி விளக்கினார்கள்.

மேலும், மறுமையில் அல்லாஹ் தமக்குச் செய்திருக்கும் சில சிறப்பு சலுகைகளையும் எடுத்துரைத்தார்கள்.

அந்த உரையின் ஒரு பகுதியில் நரகம் குறித்து கூறினார்கள்; “நான் நரகத்திடம் ஆணையிட்டால், அது என் ஆணைக்கு உடன்படுகிறது" என்று சொன்னதும், அவர்களது குடும்பத்தாரில் ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை மேல் உயர்த்தி வானத்தை நோக்கி சுட்டார்; மேலும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சில வெடிகள் வெடிக்கப்பட்டன. 

அந்த காட்சி ஒரு திருமண விழா  கொண்டாட்டம் போன்ற மகிழ்ச்சியை நினைவூட்டியது.

அந்த கனவைக் கண்டவர், பேரானந்தத்தால் தன்னை அடக்க முடியாமல் கனவிலேயே கண்ணீர் சிந்தினார்.

உறக்கத்திலிருந்து விழித்த பின்னரும், அந்த அழுகை தொடர்ந்தது; அப்போது அவர் அல்லாஹ்விடம், "நபிகளாரை நான் கனவில் கண்டேன்’ என்று கூறும் மக்களின் கூட்டத்தில் என்னையும் சேர்த்தருள்வாயாக!"அனைத்து நன்மைகளும் அல்லாஹ்வின் அருளாலேயே நிறைவேறும் என்பதால்,அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!" என்று கூறினார். 

நூல்: ரஅய்துந் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

1939 ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்து அஜ்ஹர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர்தான் இவர்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்