என்ன பேசுறீங்க நீங்க.....
என்ன பேசுறீங்க நீங்க.....
°°°°°°°°°°ππππππππ°°°°°°°°°°°°°°
நபி (ஸல்) அவர்களின்
நூரைப் பார்ப்பது
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 95
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்; அவர்களுக்கு அருகில் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம்,
“நான் ஒரு கனவு கண்டேன்; மக்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டு இருந்தார்கள் (மறுமை நாள் போல் இருந்தது).
அப்போது அனைத்து நபிமார்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு இரண்டு நூர்கள் இருந்தன; அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஒரு நூர் இருந்தது.
பின்னர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்தேன்; அவர்களுடைய தலை முடியிலும், உடலில் உள்ள ஒவ்வொரு முடியிலும் ஒளி நிறைந்திருந்தது; அவரை பின்பற்றியவர்கள் அனைவருக்கும் இரண்டு நூர் - ஒளி இருந்தது”.
இதைக் கேட்ட கஅபுல் அஹ்பார் ( ரஹ்) அவர்கள் அவரிடம்,
“அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ளுங்கள்!; எதைப் பேசுகிறீர்கள் என்பதை கவனித்துப் பேசுங்கள்;
அதற்கு அந்த மனிதர்,
“இது ஒரு கனவு மட்டுமே; நான் எதைப் பார்த்தேனோ அதை அப்படியே சொல்லி இருக்கிறேன்;
அப்போது கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் “முஹம்மது (ஸல்) அவர்களை சத்தியத்துடன் அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
மேலும் மூஸா பின் இம்ரான் அவர்களுக்கு தவ்ராத்தை இறக்கி வைத்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கூறியதுபோலவே இது மூஸா பின் இம்ரான் (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்லாஹ்வின் நூலில் (தவ்ராத்தில்) உள்ளது; ( அதாவது இரண்டு ஒளி உடையவர் நபிகள் நாயகம் அவர்கள் என்று தவ்ராத்தில் உள்ளது).
நூல் : நிஹாயதுல் அரப் ஃபீ ஃபுனூனில் அதப்
உள்ளத்தாலும் உடலாலும் ஒளியால் நிரம்பிய நபிகள் நாயகம் அவர்களின் சொல்லும் செயலும் நமக்கு வழிகாட்டியாகும்.
அதாவது நபிகள் நாயகம் அவர்களுக்கு இரண்டு ஒளி இருக்கிறது என்பதின் பொருள் என்னவென்றால், ஒரு ஒளி இருப்பவரையே பின்பற்றி நடக்கலாம் என்கிற போது, இரண்டு ஒளி இருப்பவரை கண்மூடிக் கொண்டு பின்பற்றி வாழலாம் என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
Comments
Post a Comment