குனூத் நாஸிலாவை ஓதி வாருங்கள்
குனூத் நாஸிலாவை
ஓதி வாருங்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 75
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
கலீஃபா அல் முஸ்தன்ஜித் பின் அல் முக்தஃபி லி அம்ரில்லாஹ் (கி.பி.1136 - 1160) அவர்களிடமிருந்து வஜீர் இப்னு ஹுபைரா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
பதினைந்து வருடங்களுக்கு முன்பு நபி (ஸல்) அவர்களை நான் (அல் முஸ்தன்ஜித்) கனவில் கண்டேன்.
அப்பொழுது நபிகளார், "உமது தந்தை கலீஃபா பொறுப்பில் பதினைந்து வருடங்கள் இருப்பார்" என்று கூறினார்கள்; அவ்வாறே எனது தந்தை ஆட்சி பொறுப்பில் இருந்தார்.
அல் முஸ்தன்ஜித் அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்; என் தந்தை அல் முக்தஃபி அவர்கள் மறைவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நபி (ஸல்) அவர்களை மீண்டும் கனவில் கண்டேன்.
அப்பொழுது என்னை ஒரு பெரிய வாசலின் வழியாக அழைத்துச் சென்றார்கள்; பிறகு ஒரு மலையின் உச்சியில் இருப்பது போன்று உணர்ந்தேன்; அங்கே எனக்கு இரண்டு ரக்அத்துகளை தொழ வைத்தார்கள்; நான் நபிகளாருக்கு பின்னால் நின்று தொழுதேன்.
பிறகு எனக்கு ஒரு சட்டையை நபிகளார் அணிவித்தார்கள்; அதற்குப் பிறகு என்னிடம்
اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيْمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيْمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي مِنَ الْخَيْرِ فِيْمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضِي عَلَيْكَ فَإِنَّهُ لَا يَدْلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ فَلَكَ الْحَمْدُ عَلَي مَا قَضَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ وَصَلَّى اللَّهُ عَلَي النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
என்று தொடங்கும் குனூத் நாஸிலாவை சொல்லிக் கொடுத்து தொடர்ந்து ஓதி வரச் சொன்னார்கள்; இன்று வரை ஓதி வருகின்றேன்.
நூல் : அல் காமில் ஃபி தாரிக்
பெரிய வாசல் என்பது கலீஃபா பொறுப்புக்கான நுழைவாயில்.
மலை உச்சி என்பது உயர்ந்த பொறுப்பு மற்றும் பெருமைக்குரிய பதவியைக் குறிக்கும்.
இரண்டு ரக்அத் தொழுவது என்பது பொறுப்பேற்ற பிறகு அல்லாஹ்வோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
சட்டை அணிவித்தல் என்பது கலிஃபா ஆட்சிக்கான அதிகார ஆடையை அணிவித்திருப்பதாக பொருள்.
குனூத் துஆவை கற்பித்தல் என்பது ஆட்சியைப் பெறுவதற்கும் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கும் அல்லாஹ்வோடு துஆ மூலம் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை குறிக்கும்.
Comments
Post a Comment