நீ இங்குதான் இருக்கிறாயா?
நீ இங்குதான் இருக்கிறாயா?
==============================
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 76
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
முஹம்மது பின் நஸ்ரு அல் மரூஸீ (ரஹ்), முஹம்மது பின் ஜரீர் அத்தப்ரீ (ரஹ்), முஹம்மது பின் அல் முக்திர் (ரஹ்) ஆகியோர் எகிப்தின் 'தியார்' எனும் நகரத்தில் இருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஒரு வீட்டில் அமர்ந்து ஹதீஸ்களை தொகுத்து எழுதி கொண்டு இருந்தார்கள்; அந்த நாளில் அவர்கள் சாப்பிடுவதற்கு என்று எதுவும் இல்லை.
இவர்கள் தமக்குள், "ஒருவரை வெளியே அனுப்பலாம்; அவர் வெளியே சென்று ஏதேனும் ஒரு வகையில் சாப்பாட்டை கொண்டு வரட்டும்" என முடிவு செய்தனர்.
யார் வெளியே செல்வது என்பதற்காக சீட்டு குலுக்கி போட்டார்கள்; அப்பொழுது முஹம்மது பின் நஸ்ரு (ரஹ்) அவர்களுடைய பெயர் வந்தது.
அது ஒரு கைலூலா உறக்க நேரம்; அவர் எழுந்து நின்று தொழுது அல்லாஹ்விடம் துஆ செய்தார்.
மற்றொருபுறம் எகிப்து நாட்டின் துணை ஆளுநர் அஹமது பின் தூளூன் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்; அந்த உறக்கத்தில் அவர் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தார்.
நபி (ஸல்) அவர்கள், அஹமது பின் தூளூன் அவர்களைப் பார்த்து, "நீ இங்கு இருக்கிறாயா? அங்கு முஹம்மது வாதிகள் (முஹம்மது என பெயர் கொண்ட) அனைவரும் பசியினால் மிகவும் சிரமப்படுகிறார்கள்; அவர்கள் சாப்பிடுவதற்கு என்று எதையும் சில நாட்களாகப் பெற்றுக் கொள்ளவில்லை" என்று கூறினார்கள்.
திடீரென விழித்து எழுந்து, "இங்கே ஹதீஸ் அறிஞர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ஒருவர், "இங்கு இன்னின்ன பெயருடைய சிலர் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
உடனே அஹமது பின் தூளூன் அவர்கள் ஆயிரம் தீனார்களையும், உணவையும் அனுப்பி வைத்தார். தூளூன் அவர்களின் தூதர் அதை எடுத்துச் சென்று கொடுத்தார்; அல்லாஹ் அவர்களின் சிரமங்களை அகற்றி விட்டான்; அவர்களின் பணிகளை லேசாக்கி வைத்தான்.
பின்னர் தூளூன் அவர்கள், ஹதீஸ் வாதிகள் தங்கியிருந்த வீட்டை விலைக்கு வாங்கி பள்ளிவாசலாகக் கட்டினார்; அதை ஹதீஸ்களை வாசிப்போருக்கும், எழுதுவோருக்கும் என வக்ஃபு செய்தார்; மேலும் அந்தப் பள்ளிவாசலுக்கு என சில வருவாய்க்குரிய வக்புஃகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.
நூல் : ஹஸன் அல் முஹாழரா, அல் பிதாயா வந்நிஹாயா
அல்லாஹ்வுக்காகவும், ரசூளுக்காகவும் பணியாற்றி வந்த சிலர் பசியால் வாடியதை அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் துணை நிலை ஆளுநருக்கு தகவல் கொடுத்து ஹதீஸ்வாதிகளின் கஷ்டங்களை நீக்க வழிவகை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த வரலாற்றின் மூலம் நாம் அறிகின்றோம்.
எகிப்து நாட்டின் துணை ஆளுநர் அஹமது பின் தூளூன் ரஹ் அவர்கள் குறித்து நாளை ஒரு செய்தியை காண்போம்.
Comments
Post a Comment