என்ன ஆச்சி? இங்கே வா! என நபிகள் நாயகம் அழைத்தார்கள்

என்ன ஆச்சி? இங்கே வா! 
என நபிகள் நாயகம் அழைத்தார்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11

தொடர்: 96

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள், யஅகூப் பின் ஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். 

நான் (ஹதீஸை தேடிச் சென்ற) பயண காலத்தின் இரவு நேரங்களில் விளக்கின் ஒளியில் எழுதிக் கொண்டிருப்பேன்; அவ்வாறு ஒரு இரவு எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென எதோ ஒன்று என் கண்களில் பட்டது. அதனால் விளக்கின் ஒளியையே என்னால் பார்க்க முடியாமல் கண்கள் குருடாகி ஆகிவிட்டது. 

உடனே நான் என் பார்வை போய்விட்டதே என்றும், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை இனி எழுத முடியாமல் போய்விடுமோ என்றும், நான் அந்நிய நாட்டில் (பயணத்தில்) இருக்கிறேனே என்றும் எண்ணி அழுதேன்.

இவ்வாறு மனவேதனையுடன் இருந்தபோது, தூக்கம் என்னை மீறிக் கொண்டு வந்தது; நான் தூங்கிவிட்டேன். கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்.

அவர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று?"  என்று கேட்டார்கள்; நான் என் நிலையை அவர்களிடம் கூறினேன்.

வெளிநாட்டில் இருப்பதின் துயரம்,
சுன்னாவை எழுத முடியாமல் போன வேதனை ஆகிய அனைத்தையும் சொன்னேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனக்கு அருகில் வா" என்று சொன்னார்கள்; நான் அவர்களுக்கு அருகில் சென்றேன்.

அவர்கள் தமது கையை என் கண்களின் மீது வைத்து, குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதி ஊதினார்கள்; அதன்பின் நான் விழித்தேன். என் பார்வை திரும்பி வந்திருந்தது!

பின்னர் எழுந்து அமர்ந்து, அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்து புகழ்ந்தேன்.”

நூல் : அல் பிதாயா வந்நிஹாயா

ஹதீஸ் துறை அறிஞரான இப்னு அஸாகிர் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 499 -  571 கி.பி. 1105 - 1176 காலகட்டத்தில் வாழ்ந்தவர் ஆவார்கள்.

இவர்கள் 80 தொகுதிகளாக தாரிக் திமஸ்க் எனும் நூலை எழுதியிருக்கிறார்கள்; நம்பகமானவர்கள் ஆவர். 

யஅகூப் பின் ஸுஃப்யான் ( ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 277 கி.பி. 890களில் வாழ்ந்தவர்கள் ஆவர். 

இவர் மிகப்பெரும் ஹதீஸ் துறை அறிஞர் ஆவார்; இவர்கள் அல் மஃரிஃபது தாரிக் எனும் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் வரலாற்றினை முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். 

இவர்களுடைய செய்தியை தான் இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக உடல் வழி சிரமங்களையும், பொருளாதார சிரமங்களையும்  தாக்கிக் கொண்டு உழைக்கும் உள்ளங்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான்.

ஹதீஸ்களை காக்கும்  மனமும் தியாகமும் இருப்பவருக்கு உதவிகள் கனவிலும் கருணையாய் வந்து சேரும்.

இழப்பு வந்தால் அழு! ஆனால் நம்பிக்கையை இழக்காதே! அல்லாஹ்விற்காக முயற்சிப்போருக்கு  பார்வையும் வழிகாட்டுதலும் திரும்ப வழங்கப்படும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

இஸ்லாம் மார்க்கத்தின் வளர்ச்சிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வடிக்கப்பட்ட கண்ணீர், அல்லாஹ்வின் கருணையை அழைத்தே தீரும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்