அனஸ்! அவரை விடுங்கள்!! அவர்தான் நமக்கு வேண்டும்!!!

அனஸ்! 
அவரை விடுங்கள்!! 
அவர்தான் நமக்கு வேண்டும்!!!
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 103

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

உஸ்தாத் அப்துல் அஸீஸ் அபூல் ஃபழ்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
“ஒரு நாள் கனவில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து உளூ செய்து கொண்டிருப்பதாகக்  கண்டேன்.

அவர்களின் பணியாளர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், நபிகளாரின் முன் நின்று, கையில் தண்ணீர் நிரம்பிய குவழையை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு தண்ணீர் ஊற்றி உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில் நான் விரைந்து வந்து  அனஸ் (ரலி) அவர்களின் கையிலிருந்த குடுவையை பறித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கைகளில் நான் தண்ணீர் ஊற்றத் தொடங்கினேன்.

இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள் கோபமடைந்து, என் கையிலிருந்த குடுவையைப் பறிக்க முனைந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள்,
"அனஸ்! அவரை விடுங்கள்; அவர்தான் நமக்கு வேண்டும்" என்று கூறினார்கள்.

அந்த கனவிலிருந்து உஸ்தாத் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் விழித்துக் கொண்ட பிறகு, அன்றைய தினம் அங்கிருந்த ஒரு ஷைக் அவர்களிடம் கனவைக்  கூறி விளக்கம் கேட்டார்கள்.

அதற்கு அந்த ஷைக் அவர்கள் "இந்தக் கனவுக்கு இரண்டு அர்த்தங்களில் ஒன்றே விளக்கமாக இருக்க முடியும்;

1.  நீங்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்ய செல்வீர்கள்; அதன் வழியாக, நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவிற்கு செல்வீர்கள்.

2.  அல்லது நீங்கள் மரணம் அடைந்து, நபி (ஸல்) அவர்களிடம் செல்வீர்கள்" என்று கூறினார்கள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் அல்லாஹ்வின் அருளால் ஹஜ் செய்யச் சென்றார்; அதற்குப் பிறகு இன்னும் சிறிது காலமே கடந்த நிலையில், அல்லாஹ் அவரை தன்னளவில் அழைத்துக் கொண்டான் (அவர் வஃபாத் அடைந்தார்).

நூல் : முன்தகபுல் கலாம் ஃபீ தஃப்ஸீரில் அஹ்லாம்

நபிகள் நாயகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து பிடுங்கி உதவி செய்த நல் உள்ளத்தை நபிகள் நாயகம் அவர்கள் நயமாக புரிந்து கொண்டார்கள்.

அல்லாஹ்வின் அருகில் இருக்க இவரே தகுதியானவர் என்பதை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் இவர் தான் நமக்கு வேண்டும் எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் நெருக்கத்தைப் பெற விரும்புவோர் தூய உள்ளம் உடையவராகவும் உண்மையாகவே சேவை செய்யும் மனப்பான்மை உடையவராகவும் இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது; எனவே அதிகம் சேவை செய்யுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்