கவிதையையும் கவிஞர்களையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பிடிக்குமா?
கவிதையையும் கவிஞர்களையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு பிடிக்குமா?
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
நான் அதை நேசிக்கிறேன்; அதை
நேசிப்பவர்களையும் நேசிக்கிறேன்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11
தொடர்: 95
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
ஒரு அறிஞர், தன் பாடசாலையை தொடங்கும் போது, கஅப் பின் ஜுஹைர் (ரலி) அவர்களின் ஒரு கவிதையை வாசிக்காமல் ஒருபோதும் தொடங்க மாட்டார். அதையே அவர் வளமையாக வைத்திருந்தார்.
இதற்கான காரணம் அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் “நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்;
அப்போது அவர்களிடம், ‘யா ரசூலல்லாஹ்! கஅப் பின் ஜுஹைர் (ரலி) அவர்களின் கவிதையை உங்கள் முன் பாடட்டுமா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! (பாடுங்கள்) நான் அவரின் கவிதையை நேசிக்கிறேன்; அதை நேசிப்பவர்களையும் நேசிக்கிறேன்"
என்று கூறினார்கள்.
“அதனால், அந்தக் கவிதையை தினமும் பாடசாலையில் பாடம் தொடங்குவதற்கு முன்பு வாசிக்காமல் இருக்கமாட்டேன் என்று அல்லாஹ்விடம் நான் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்” என்று கூறினார்.
நூல் : நஃபஹுத் தையிப் ஃபீ குஸ்னில் உன்துலுஸிர் ரதீப்
நபியை நேசிப்பது என்பது நபிகளார் எதையெல்லாம் நேசித்தார்களோ அதையும் நேசிப்பதே முழுமையான நேசமாகக் கருதப்படும்.
அந்த வகையில் நபிகள் நாயகம் அவர்கள் ஜுஹைர் (ரலி) அவர்களின் கவிதைகளையும் , ஜுஹைர் (ரலி) அவர்களையும் நேசித்திருக்கிறார்கள். அவ்வாறே நாமும் நேசிப்போம்.
Comments
Post a Comment