அல்லாஹ்வை நாம் வணங்குவதால், அல்லாஹ்விற்கு (பவர்) அதிகாரம் அதிகரிக்குமா?
அல்லாஹ்வை
நாம் வணங்குவதால், அல்லாஹ்விற்கு (பவர்) அதிகாரம் அதிகரிக்குமா?
^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^°^
عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ - رضي الله عنه - عَنْ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى، أَنَّهُ قَالَ: يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنكُمْ؛ ما زَادَ ذلكَ في مُلْكِي شيئًا،. رواه البخاري ومسلم
அபூ தர்ருல் கிஃபாரீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என் அடியார்களே! உங்களில் ஆதிகாலத்தவர்களும் கடைசி காலத்தவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும் சேர்ந்து உங்களில் இறையச்சமுள்ள ஒரு மனிதனின் இதயத்தைப் பெற்றவர்களாக இருப்பினும் அதனால் என் ஆட்சி அதிகாரத்தில் எதுவும் அதிகமாகிவிடப் போவதில்லை.
நூல் : புகாரி, முஸ்லிம்.
"அதாவது மனிதர்களுடைய மற்றும் ஜின்களுடைய இதயம் முழுவதும் ஈமானால் நிரம்பி இருப்பதால், முழுமையாக இறைவனுக்கு கட்டுப்பட்ட அடியானாக இருந்து நற்செயல்கள் செய்வதால் அல்லாஹ்விற்கு எந்த அதிகாரமும் அதிகரித்து விடப் போவதில்லை" என்பதுதான் இந்த ஹதீஸின் பொருள்.
ஒரு மனிதன் அல்லாஹ்வை அதிகமாக நேசிக்கிறான்;
ஒருவன் அல்லாஹ்வுக்காக அதிகமாக தர்மங்களைச் செய்கிறான்;
ஒருவன் தொழுகிறான்;
நோன்பு நோற்கிறான்;
தான தர்மங்களை தாராளமாக வழங்குகிறான்;
ஹஜ், உம்ரா போன்ற வழிபாடுகளை செய்கிறான் ;
நல்லதை ஏவுகிறான் தீமையை தடுக்கிறான்;
அல்லாஹ்வின் மீது அதிகம் இறையச்சம் உள்ள இதயத்தை கொண்டவனாக இருக்கின்றான்;
இது போன்ற எண்ணற்ற நற்காரியங்களை அல்லாஹ்விற்காக ஒருவன் செய்து கொண்டே இருக்கிறான்.
இதனால் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்தில் ஏதேனும் அதிகரிக்கவாப் போகிறது?
அல்லது அல்லாஹ்விற்கு ஏதேனும் ஒரு வகையில் ஏதேனும் ஒன்று அதிகமாக கிடைக்கப் போகிறதா? அல்லது குறைந்து விடப் போகிறதா?
எதுவும் இல்லை....
எனவே நீங்கள் செய்கிற எந்த நல்ல விஷயங்களும் அவனுக்கு ஒன்றை அதிகரித்து கொடுத்து விடாது.
நீங்கள் செய்கின்ற எந்தத் தீய விஷயங்களும் அவனுக்கு உள்ள ஒன்றை குறைத்து விடாது.
உங்கள் இபாதத் - வழிபாடு அவனுக்கு தேவையற்ற ஒன்று.
எனவே நீங்கள் செய்கிற அமல்களைக் கொண்டு பெருமை அடித்து கொள்ள வேண்டாம்.
அல்லாஹ் சொல்வதை செய்கிற போது இதாஅத் - அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதை கண்டு அல்லாஹ் சந்தோஷப்படுகிறான். அவ்வளவுதான்!
அவனுக்கு நாம் சந்தோஷத்தை கொடுத்த ஒரே காரணத்துக்காக அவன் உலகில் வாழும் நமக்கு பல சந்தோசங்களை கொடுக்கின்றான்.
இறந்த பிறகு மறுமையில் சொர்க்கம் என்கிற அந்தஸ்தை கொடுத்து சந்தோஷப்படுத்துகிறான்.
ஆனாலும் அல்லாஹ்வினால் அதிக பயன் பெறுவது மனிதர்களே! எனவே அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்! அவன் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துங்கள்!
Comments
Post a Comment