அபூ பக்ர் ரலி அவர்களின் அழகிய அறிவுரை!!
அபூ பக்ர் (ரலி) அவர்களின்
அழகிய அறிவுரை ...................!!
^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~^~
அப்துல்லாஹ் பின் அபூபக்ர் பின் முஹம்மது பின் அம்ரு பின் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது;
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஷாம் செல்லும் 3000 பேர் கொண்ட படையினரை ஒன்று கூட்டினார்கள்.
படையினர் மதீனாவிலிருந்து வெளியேறிய போது அவர்களில் அதிகமானவர்கள் முஹாஜிர்களும், அன்சாரிகளும் இருந்தனர்.
படை புறப்பட்டுச் செல்லும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அம்ரு பின் ஆஸ் (ரலி ) அவர்களின் வாகனத்திற்கு அருகில் நடந்து கொண்டு கூறினார்கள்.
"அம்ரே! படையினரை அய்லா எனும் ஊர் வழியாக ஃபாலஸ்தீன் அழைத்துச் செல்லுங்கள்;
தனிமையிலும் மக்களோடு இருக்கும் போதும் அல்லாஹ்வை பயந்த கொள்ளுங்கள்! மேலும் அவனுக்கு முன்பு வெட்கப்படுங்கள்! ஏனெனில் அவன் உங்களையும் உங்கள் செயல்களையும் பார்க்கின்றான்.
மேலும் யார் உங்களை விட இஸ்லாத்தில் முந்தியவர்களாகவும், பழையவர்களாகவும், உங்களை விட இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும், பயனளிக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களை விட உங்களை அமீர் - தளபதி பொறுப்புக்கு நான் முற்படுத்தியிருப்பதை காண்கிறீர்.
எனவே மறுமைக்காக செயல்படுங்கள்! உமது செயல்கள் மூலம் அல்லாஹ்வின் ரிழா- பொருத்தத்தை நாடுவீராக!
மேலும் உங்களுடன் இருக்கும் மக்களுக்கு தந்தையாக இருப்பீராக! அவர்களின் மறைவான விஷயங்களை பகிரங்கப்படுத்திட வேண்டாம்.
மேலும் அவர்களின் வெளிப்படையான செயல்களை பார்ப்பதையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்!
உங்களின் பிரச்சனைகளை நன்கு ஆய்வு செய்து செயல்படுங்கள்! எதிரிகளை சந்திக்கும் போது நிலையாக நின்று போரிடுங்கள்! கோழையாகி விட வேண்டாம்.
போர் வெற்றி பொருட்களில் மோசடி நடக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, உரியவருக்கு சரியான தண்டனை கொடுங்கள்!
மேலும் உங்கள் படையினருக்கு அறிவுரை கூறினால் சுருக்கமாக கூறுங்கள்! உங்களையும் சரி செய்து கொள்ளுங்கள்! அதனால் உங்களுடன் இருப்பவர்கள் உங்களுக்கு கட்டுப்படுவார்கள்.
Comments
Post a Comment