இலக்கணம் மாறாமல் இறைவன் திட்டினான்

இலக்கணம் மாறாமல் 
இறைவன் திட்டினான் :
•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°•°
தொடர்ச்சி  : .....3
 
 إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; மதீனாவைச் சேர்ந்த கஅப் பின் அஷ்ரஃப்  அவர்கள் மக்காவிற்கு வந்திருந்த போது குரைஷியர்கள் "நீங்கள் மதீனாவில் உள்ள மனிதர்களில் சிறந்தவர்; அவர்களின் தலைவரும் கூட" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப் பின் அஷ்ரஃப் " ஆமாம் உண்மைதான்" என்று கூறினார். 

குரைஷிகள் " அவர் ஒரு புடை கட்டை ( வாழை மரத்தின் வேரிலிருந்து துளிரும் புடை கட்டைகள் எந்தப் பயனும் இல்லாதது; அதை வீணாகவே வெட்டி எறிவார்கள்;) தன் கூட்டத்தில் சந்ததி இல்லாத ஒரே மனிதர்; அவர் நம்மை விட சிறந்தவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்; நாங்கள் தான் சிறந்தவர்கள்,  தோட்டம் துறவு உள்ளவர்கள்; கஅபே! நீங்கள் தான் அவரை விட சிறந்தவர்" என்று கூறினார்கள்.

அப்பொழுதுதான் "நபியே! உங்களை வெறுப்பவர்களே சந்ததியற்றவர் ஆவார்" எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

நூல்: நஸாயீ , இப்னு ஹப்பான்.

அதாவு பின் அபீ ரபாஹா (ரலி) அவர்கள் கூறுவதாவது; இந்த வசனம் அபூ லஹப் குறித்து அருளப்பட்டது. 

நபி (ஸல்) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இறந்திருந்த போது அபூ லஹப் தன் நண்பர்களிடம் சென்றிருந்தான். அப்போது, "இன்று இரவு முஹம்மது சந்ததி அற்றவராக ஆகிவிட்டார்" என்று சொல்லி ஆனந்தம் அடைந்தான். அப்பொழுதுதான் இந்த வசனம் அருளப்பட்டது. 

நூல்: தஃப்ஸீர் ராஜி

நபி (ஸல்) அவர்கள் குறித்துத் தவறாகப் பேசிய ஆஸ் பின் வாயில், அபூ லஹப், அபூ ஜஹல் ஆகிய மூவரும் ஒரே கருத்தையே திரும்பத் திரும்ப வெவ்வேறு இடங்களில் கூறினார்கள். அதனால் அவர்கள் கூறிய சொல் அவர்களுக்கே உரியது என அல்லாஹ் வழி மொழிந்த வார்த்தை தான் 'அப்தர்'.

"ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொள்ளும்" என தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். 

அவர்கள் சொன்ன வார்த்தை அவர்களுக்கே உரித்தாகிவிட்டது. 

"Happy Ramzan Same to you - ரமலான் வாழ்த்துக்கள் ; அதுவே உனக்கும்" என்று இன்றைய நவ நாகரீக உலகத்தில், வார்த்தைகளை குறைத்து அதே நேரம் அழகிய மொழிநடையிலும், இலக்கண முறையிலும் பேசுவது போல் அன்றே அல்லாஹ் பேசி இருக்கின்றான். (இல்லை! அவன் பேசியது போல் இன்று நாம் பேசி வருகிறோம்.)

"அவர்கள் இன்னஹு அப்தர்" என்றார்கள். அல்லாஹ், "இன்னக்க அப்தர்" என்று சொல்லி முடித்துக் கொண்டான்.

இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த அரபியர்களிடம் அல்லாஹ்வும் இலக்கிய முறைப்படி பேசி இருக்கின்றான்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்