78வது சுதந்திர தினம்
78வது சுதந்திர தினம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் சாதியினருக்கும் குறிப்பிட்ட ஒரு நாளில் பண்டிகைகள் இருக்கின்றது.
அந்த நாட்களில் அவரவர் பண்டிகைகளை அனைவரும் திரளாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி அவரவர் ஊர்களில் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
அதை சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பார்த்தும், படித்தும் வருகிறோம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இந்தியர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் ஒன்று கூடி மிக ஆரவாரமாக கொண்டாட வேண்டிய தேசியத் திருவிழா ஆகஸ்ட் 15.
ஆனால் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாம் தூரமாக ஆகிவிட்டதாலோ என்னவோ (78 வருடங்கள் கடந்து விட்டது ) அந்த நாளின் மீது மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை!
சுதந்திர நாள் விடுமுறை நாளாகவும், அரசும், அரசு அலுவலகங்களும் விழா நடத்தும் நாளாகவும் மட்டுமே இன்று மக்களால் பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment