அண்ணலாருக்காக அல்லாஹ் பேசிய வார்த்தை அப்தர்

அண்ணலருக்காக 
அல்லாஹ் பேசிய வார்த்தை 
அப்தர்....
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

 தொடர்ச்சி ....2

إِنَّ شَانِئَكَ هُوَ الأبْتَرُ 
நபியே! உம்மை வெறுப்பவரே 
சந்ததி அற்றவர்

மக்காவில் நபி (ஸல்) அவர்கள் ஓர் இறை கோட்பாட்டை முன்மொழிந்ததும் கருத்தியல் அடிப்படையிலான எதிரிகள் அதிகரித்தார்கள். 

அதனால் முஸ்லிம்களுக்கோ நபி (ஸல்) அவர்களுக்கோ ஏதேனும் ஒரு வகையில் பின்னடைவு , மீள முடியாத நெடுந் துயரங்கள் ஏற்பட்டால் எதிரிகளான இறை மறுப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள்.

அப்படி அவர்கள் சந்தோஷப்பட்டு சொன்ன ஒரு வார்த்தை தான் அப்தர் -  நபியே! நீர் சந்ததி இல்லாதவர்.

பொதுவாகவே அரபியர்களிடம் பதர் -  சந்ததியற்றவன் நாதியற்றவன் எனும் வார்த்தை புழக்கத்தில் இருந்தது. 

ஆகக் கீழ்த்தரமாக, கேவலமாக ஒருவரைச் சாடவே அரபியர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வந்தார்கள். 

இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நபிகளார் மீது பயன்படுத்தியதால் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 

எதிரிகள் திட்டிய நேரம், காலம் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது ‌. நபி (ஸல்) அவர்களுக்கு அந்த சூழல் எதிராக இருந்தது.

அதனால் நபி (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை காதில் கேட்டும், மௌனமாக அந்த இடத்தை கடந்துச் சென்றார்கள்.

ஆனால் அல்லாஹ் தன் ஹபீபை -  நேசத்திற்குரிய வரை திட்டியதை சகிக்க இயலாமல் எவன் சொன்னானோ அவனைப் பார்த்து அப்தர் - நீதான் சந்ததி அற்றவன் என்று பதில் கூறினான்.

நபி (ஸல்) அவர்களுக்காக அல்லாஹ் இவ்வாறு பல்வேறு சமயங்களில் பேசியிருக்கின்றான்.

நூல் : தஃப்ஸீர் குர்துபீ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்