நபிப் புகழை அளவிட முடியாமல் அறிவுத் திணறுகிறது
நபிப் புகழை
அளவிட முடியாமல்
அறிவுத் திணறுகிறது :
^÷^÷^÷^÷^÷^÷^÷^×^÷^÷^÷^÷^÷
காயல்பட்டினம்
சதக்கத்துல்லா அப்பா
அவர்கள் இயற்றிய
'கஸீதத்துல் வித்ரியா' வில் இருந்து
ஒரு கவிதை
நபியே
தங்களின் புகழை
அளவிட முடியாமல்
எங்கள் அறிவுத் திணறுகிறது!
நபியே!
உங்களைப் புகழ்வதால்
எங்களின் அநீதிகளும் ,
பாவங்களும் அழிகிறது!
ஒளிரும் பேரொளியே!
செல்வங்களின் நிலைக்கலனே!
நீங்கள்
என் அச்சத்தை அகற்றி விட்டீர்!
நேர்வழியின் தலைமையே !
பகைமையின் நஞ்சே!
தேவைகளைத் தரும்
அருள் நிலையமே!
ஒட்டுமொத்த நன்மைகளின் களஞ்சியமே!
(மறுமையில் )
எங்களுக்கு நேர இருந்த நாசம்
உங்களால் விலகுகிறது!
Comments
Post a Comment