நபிகள் நாயகம் குறித்து ஒரு நபியின் வாக்குமூலம்
நபிகள் நாயகம் குறித்து ஒரு
நபியின் வாக்குமூலம்
×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷
வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உயர்ந்தோன் அல்லாஹ் இஸ்ர வேலர்களின் நபிமார்களில் ஒருவரான ஷஅயா (அலை) அவர்களுக்கு (ஏசாயா) இறையறிவிப்பு' (வஹீ) வழங்கும்போது, "நீர் உம்முடைய இஸ்ரவேலர் சமுதாயத்தாரிடையே எழுந்து நிற்பீராக நான் . நான் உமது நாவை 'வஹீ' மூலம் பேசச்செய்கிறேன்" என்று கூறினான்.
(அவர் அவ்வாறே செய்ய, அவர் வழியாக இறைவன் பின்வருமாறு பேசினான்:)
நான் எழுத வாசிக்கத் தெரியாத மக்களில் ஒருவரை நபியாக அனுப்பவுள்ளேன். அவர் கடின சித்தம் கொண்டவராகவோ முரடராகவோ கடைவீதிகளில் கூச்சலிடுபவராகவோ இருக்கமாட்டார்.
அவர் (எரியும்) விளக்குக்கு அருகில் நடந்து சென்றாலும் அவரது அமைதியால் விளக்கு (காற்றில்) அணைந்துவிடாது. அவர் மூங்கில் மேல் நடந்தாலும் அவருடைய காலடி களுக்குக் கீழேயிருந்து ஓசை எழாது.
அவரை நான் நற்செய்தியாளராக வும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்புவேன். நெறி பிறழ்ந்த எதையும் அவர் மொழியமாட்டார்.
அவர்மூலம் நான் குருட்டுக் கண்களையும் செவிட்டுக் காதுகளையும் மூடிய உள்ளங்களையும் திறப்பேன்.
ஒவ்வொரு நற்காரியத்திற்காகவும் அவரை நான் நெறிப்படுத்துவேன். நற்பண்புகள் அனைத்தையும் அவருக்கு நான் நல்குவேன்.
அமைதியை அவரது ஆடையாகவும் நன்னடத்தையை அவரின் அடையாளமாகவும் இறையச்சத்தை அவரது அந்தரங்கமாகவும் நுண்ணறிவை அவரது மொழியாகவும் உண்மை பேசுதல், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் ஆகியவற்றை அவரின் இயல்பாகவும் மன்னிப்பு, உதவி ஆகியவற்றை அவரின் பண்பாகவும் சத்தியத்தை அவரது நெறியாகவும் நீதியை அவரது நடைமுறையாகவும் நல்வழியை அவரது முன்னோடியாகவும் இஸ்லாத்தை அவரது சமயமாகவும் அஹ்மத் (மாபெரும் புகழுக்குரியவர்) என்பதை அவரின் பெயராகவும் நான் ஆக்குவேன்.
மக்கள் வழித்தவறிய பின் அவர்மூலமே நல்வழி
காட்டுவேன். அறியாமைக்குப்பின் அவர் மூலமே நான் அறிவைப் புகட்டுவேன். செல்வாக்கு இழந்தபின் அவரைக் கொண்டே உயர்வைத் தருவேன்.
நான் அந்நியமானபின் அவர் மூலம் அறியப்படுவேன். (உண்மை யாளர்களின்) எண்ணிக்கை குறைந்து போனபின் அவர்மூலமே அதிகப் படுத்துவேன்.
வறுமைக்குப்பின் அவர்மூலமே தன்னிறைவை வழங்குவேன். பிள வுக்குப்பின் அவர்மூலமே மக்களை ஒன்றிணைப்பேன். பிரிந்துபோன சமூகங்களையும் வேறுபட்ட இதயங் களையும் சிதறிப்போன எதிர்பார்ப்பு களையும் ஒருங்கிணைப்பேன்.
அவர் மூலமே மனிதர்களில் பெருங்கொண்ட கூட்டத்தை அழிவிலிருந்து காப்பேன்.
மனிதகுலச் சீர்திருத்தத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களில் சிறந்த சமுதாயமாக அவருடைய சமுதாயத்தை ஆக்குவேன். அந்தச் சமுதாயத்தார் நன்மை செய்யுமாறு ஏவுவர். தீமையிலிருந்து தடுப்பர்.
அவர்கள் ஓரிறைவாதிகளாக, இறை நம்பிக்கையாளர்களாக. உளத்தூய்மை நிறைந்தவர்களாக, என் தூதர்கள் கொண்டுவந்தவற்றை ஏற்பவர்களாக இருப்பர்.
இறைவனைத் துதித்தல் (தஸ்பீஹ்). புகழ்தல் (தஹ்மீத்), போற்றுதல் (ஸனா) பெருமைப்படுத்தல் (தக்பீர்), ஓரிறை உறுதிமொழி (தவ்ஹீத்) போன்ற திக்ருகளை அவர்கள் தம் பள்ளிவாசல்கள், அவைகள். படுக்கைகள், புகலிடங்கள், தங்குமிடங்கள் ஆகியவற்றில் செய்யு மாறு அவர்களுக்கு நான் அகத்தூண் டல் ஏற்படுத்துவேன். அவர்கள் என்னை நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் தொழுவார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் வழியில் அணியணியாகவும் படைகளாகவும் திரண்டு அறப்போர் புரிவார்கள். அவர்கள் என் அன்பை எதிர் பார்த்து ஆயிரக்கணக்கில் தம் இல்லங் களிலிருந்து (அறப்போருக்காக) புறப் படுவார்கள்.
அவர்கள் தம் முகங்களையும் உடலுறுப்புகளையும் கழுவித் தூய்மை (உளூ) செய்வார்கள். கீழாடைகளைக் கணைக்கால்களின் பாதிவரையே கட்டுவார்கள்.
அவர்களின் குர்பானி' (தியாகம்) அவர்களின் குருதிகள் ஆகும். அவர்களின் வேதங்கள் அவர்களின் இதயங்களில் இருக்கும். இரவில் பற்றற்றவர்களாகவும் பகலில் போர்ப் படைச் சிங்கங்களாகவும் விளங்குவார்கள்.
அந்த இறைத்தூதரின் குடும்பத்தார். மற்றும் வழித்தோன்றல்களில் ஆன் றோர். வாய்மையாளர்கள். உயிர்த் தியாகிகள், நல்லவர்கள் ஆகியோரை உருவாக்குவேன். அவருக்குப்பின்
அவருடைய சமுதாயத்தார் உண்மை வழியில் நிற்பர்; அதன்படி நீதியும் செலுத்துவர்.
அந்தச் சமுதாயத்தாருக்கு உதவி செய்வோரை நான் கண்ணியப்படுத்து வேன். அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிவோரை ஊக்கப்படுத்துவேன். யாரேனும் அவர்களுக் கெ கதிராக நடந்தாலோ, அவர்கள் மீது எல்லை மீறினாலோ, அவர்களின் கைகளிலுள்ளவற்றில் எதையும் பறிக்க முனைந்தாலோ அத்தகையோருக்குக் கெட்ட முடிவை ஏற்படுத்துவேன்.
அச்சமூகத்தாரை அவர்களுடைய நபிக்கு வாரிசுகளாக ஆக்குவேன். தம் இறைவன்பால் வருமாறு அழைக்கும் பரப்புரையாளர்களாகவும் அவர்களை நான் ஆக்குவேன். அவர்கள் நன்மை செய்யுமாறு ஏவுவார்கள். தீமையிலி ருந்து தடுப்பார்கள். தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள். கட்டாய தர்மம் (ஸகாத்) வழங்குவார்கள். தம் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவார்கள்.
அவர்களில் மூத்த தலைமுறை யைக் கொண்டு நான் ஆரம்பித்த நன்மையை, அவர்களில் இறுதியான வர்களைக் கொண்டு நிறைவுசெய்வேன்.
இது எனது அருளாகும். அதை நான் நாடுவோருக்கு வழங்குவேன். நான் மகத்தான அருளுடையவன் ஆவேன்'
Comments
Post a Comment