நபியே ! நீங்கள் இல்லை அவர்கள்தான்......!

நபியே !
நீங்கள் இல்லை 
அவர்கள்தான்......!
÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷×÷

தொடர்ச்சி.....4

إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ
எனும் இந்த வசனம் மட்டும் மக்காவில் அருளப்பட்டது. மற்ற இரண்டு வசனங்களும் மதீனாவில் அருளப்பட்டது.

'சந்ததியற்றவர்' எனும் சொல் வாழ்நாள் முழுவதும் நபிகளாரின் மனதை மிகப்பெரும் அளவில் பாதித்தது. மனம் காயப்பட்டு இருந்தது. 

காயம்பட்ட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தை ஆறுதல் படுத்தவே முதல் இரண்டு வசனங்களை அல்லாஹ் மதீனாவில் அருளினான். அதனால் நபி (ஸல்)  அவர்கள் ஓரளவு ஆறுதலும் அடைந்தார்கள்.

அதே சமயம் மதீனாவில் அன்னை மாரியா கிப்தியா (ரலி) அவர்கள் மூலம் இப்ராஹிம் (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மகனாகப் பிறந்தார்கள்.  அதனால் நபி (ஸல்) அவர்கள் முழுமையாக அந்த வார்த்தையின் நினைவில் இருந்து வெளிவந்து சந்தோசமாக வாழ்தார்கள்.

நபிகளாரை சோதிக்கும் விதமாக அல்லாஹ் மீண்டும் இப்ராஹிம் (ரலி) அவர்களையும் தன்னளவில் அழைத்துக் கொண்டான்.

அதனால் மக்கா இறை மறுப்பாளர்கள் சொன்னதை நினைத்து நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டார்கள்.

###

ஜுர்ஜானீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். இந்த வசனத்தில் உள்ள 'இன்ன' எனும் சொல்லும், 'ஹுவ' எனும் சொல்லும், அல் அப்தர் என்பதில் உள்ள 'அல்' எனும் சொல்லும் " கண்டிப்பாக, உறுதியாக எனும் பொருளைத் தரக் கூடியது. 

எனவே இதைச் சொன்னவர்கள்தான் "கண்டிப்பாக, உறுதியாக, நிச்சயமாக சந்ததி அற்றவர்கள்" என இறைவன் உறுதிமொழி அளிக்கின்றான்.

அதாவது நபி (ஸல்) அவர்களை நம்ப வைப்பதற்காகவும், ஆறுதல் படுத்துவதற்காகவும்  அரபு மொழியில்  உறுதியளிக்கும்  மூன்று சொற்களைப் பயன்படுத்தி அல்லாஹ் பேசி இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை எந்த சொல்லைச் சொல்லி எதிரிகள் திட்டினார்களோ அதே சொல்லையே அல்லாஹ் சொல்லி அவர்களை திட்டினான். 

மனிதர்கள் நபி (ஸல்) அவர்களைத் திட்டினார்கள். ஆனால் அல்லாஹ் நபிகளாரை திட்டியவர்களை திட்டியிருக்கின்றான். அல்லாஹ் சில மனிதர்களை திட்டியது தான் உயர்ந்த நிலை!

###

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَٰؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا 

வேதத்தில் சிறிதளவு (ஞானம்) கொடுக்கப்பட்ட சிலரை (நபியே! நீர்) பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், அட்டகாசம் செய்யும் (ஷைத்தான்களையும்,) நம்பிக்கை கொள்கிறார்கள்;  அவர்கள் இறை மறுப்பாளர்களைக் காட்டி,  "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" என்று கூறுகிறார்கள். 4 : 51

இந்த வசனத்தில் "இவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களை விட நேர்வழி அடைந்தவர்கள்" எனும் இந்த சொல், குறைஷியர்கள் 'கஅப் பின் அஷ்ரஃப்' என்பவனை சிறந்தவன் என்று சொன்னதை குறிப்பிடுகின்றது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்