மரணித்த பிறகும் உணவளித்த உத்தம நபி

சூஃபிகளின் ஹஜ் : - 63
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

மரணித்த பிறகும் 
உணவளித்த உத்தம நபி 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

இப்னு ஹஜரில் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது; 

அபுல்கைர் அக்தஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவில் ஐந்து நாட்களாக உணவு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்தார்கள். 

( அகோரப் பசியுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறைக்கு வந்து ஸலாம் கூறிய பின் ஓரமாக அமர்ந்து கண்ணயர்ந்து விட்டார்கள். 

கனவில் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வலப்புறத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இடப்புறத்திலும், அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னிலும் சூழ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். 

அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னை எழுப்பி, "இதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்று என்னிடம் கூறினார்கள். 

நான் அவர்களுக்காக எழுந்து நின்று ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டேன். 

அப்போது எனக்கு ஒரு ரொட்டியை வழங்கினார்கள். 

கனவில் அதன் பாதியை சாப்பிட்டு விட்டு விழித்துக் கொண்டேன். விழித்த நிலையில் அதன் மறுபாதியும் என் கைகளில் இருக்கக் கண்டேன்" என்றார். 

நூல் : இப்னு அபீதுன்யா

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்