ஸலவாத்தும் ஜியாரத்தும் இரண்டு கண்கள் :
சூஃபிகளின் ஹஜ் : - 58
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
ஸலவாத்தும் ஜியாரத்தும்
இரண்டு கண்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
ஹள்ரத் இப்னு அபூ பதிவூ (ரஹ்] அவர்கள் அறிவிப்பதாவது;
எந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடைய கப்ருக்கு அருகில் நின்று
إِنَّ اللهَ وَمَلَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ......
என்ற வசனத்தை முழுமையாக எழுபது முறை ஓதிய பின்னர்
صَلَّى اللهُ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ
"ஸல்லல்லாஹு அலைக்க யா ரசூலுல்லாஹ் " என்று சொல்கிறாரோ அவருக்கு ஒரு வானவர், "மனிதனே!
அல்லாஹ் உன்மீது ரஹ்மத்தை பொழிகின்றான்" என்று கூறுகின்றார்.
மேலும் அவருடைய அனைத்து தேவைகளும் முழுமையாக நிறைவேற்றித் தரப்படுகிறது.
நூல் : பைஹகீ, அஷ்ஷிபா
இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிப்பதாவது;
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
"எவர் என்னை ஜியாரத் செய்வதற்கு என்றே நாடிவருவாரோ அவர் மறுமை நாளில் என் அருகில் இருப்பார்.
இன்னும் மதீனாவில் தங்கியிருந்து அங்குள்ள கஷ்டங்களையும், சிரமங்களையும் எவர் பொறுத்துக் கொள்வாரோ, அவருக்காக நான் இறுதித் தீர்ப்பு நாளில் சாட்சியாகவும், சிபாரிஷ் செய்யக் கூடியவனாகவும் இருப்பேன்.
மேலும் ஒருவர் மக்கா முகர்ரமாவின் ஹரமிலோ அல்லது மதீனாவின் ஹரம் எல்லையிலோ மரணமடைந்து விட்டால் அவர் மறுமை நாளன்று பாதுகாப்பு பெற்றவர் கூட்டத்தில் எழுப்பப்படுவார்."
நூல்: பைஹகீ
மிஷ்காத், அல் இத்திஹாப்
Comments
Post a Comment