யார் சமூக சீர்திருத்தவாதி?
யார் சமூக சீர்திருத்தவாதி?
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மனிதர்களுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக எத்தனையோ பெரிய மனிதர்கள், மகான்கள் பூமியில் தோன்றி இருக்கிறார்கள்.
எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்று தம் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
சாக்ரடீஸ் ஜீசஸ் (ஈஸா அலை) பிறப்பதற்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி.
அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டி, சிறையிலடைத்து, விஷம் குடித்து உயிர் துறக்க வேண்டும் என்று தண்டனையும் அளித்தது அன்றைய அரசு.
சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் சிறைக் காவலர்களுக்கு அவருடைய சீடர்கள் லஞ்சம் கொடுத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து அவர் தப்பிக்கவும் அவர்கள் வழிசெய்தனர்.
ஆனால் சாக்ரடீஸ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. "மரணத்தைப் பற்றிய பயம் எனக்கில்லை" என்று சொன்னார்.
அதுமட்டுமா? விஷத்தை அவரே எந்தவித அச்சமும், சலனமும் இல்லாமல் எடுத்து குடித்தார்.
அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துக் கொண்டே வந்தது; கீழிருந்து மேலாக.
கால்கள் முழுமையாக மரத்தவுடன் உட்கார வைக்கப்பட்டார். கவலையுடன் அவருடைய சீடர்கள், “குருவே! தாங்கள் இறந்த பிறகு உங்கள் உடலை என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “என்ன வேண்டுமனாலும் செய்யுங்கள்; ஆனால் அது நான் என்று நினைத்துக்கொள்ளாதீர்” என்று பதில் கூறினார்!
என்ன அற்புதமான பதில்! "நாம் என்பது உடல் அல்ல!" என்ற உண்மையை இறுதிக் கணத்தில்கூட மறக்காமல் மக்களுக்கு எடுத்துரைத்த பெரிய ஞானி அவர்.
அதோடு அவர் அருகிலிருந்த க்ரிட்டோ என்பவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
“க்ரிட்டோ, நமது கடவுளான அஸ்கிளிபியஸுக்கு நாம் ஒரு சேவலை பலி கொடுக்கவேண்டும். இன்னும் கொடுக்கவில்லை. அந்தக் கடனைத் திருப்பி கொடுத்து விடு, மறந்துவிடாதே” என்றும் சொன்னார்!
கிரேக்கர்களுக்கு பல கடவுள்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் தான் அஸ்கிலிபியஸ்.
இவருக்கு, தான் செய்திருந்த நேர்ச்சையை செய்ய முடியாமல் போனதால் மரண தருவாயில் தன் சீடரிடம், "அந்த நேர்ச்சை நிறைவேற்றி விடு" என்று சொல்லி மரணித்திருக்கிறார்.
சாக்ரடீஸ் மிகப்பெரிய தத்துவ ஞானியாக இருந்தாலும் அவர் தன்னையும் அறியாமல் தன் சமூக மூட பழக்க வழக்கங்களில் கட்டுண்டு கிடந்திருக்கிறார் என்பதை அவருடைய இறுதி வாக்குமூலம் புலப்படுத்துகிறது.
ஒவ்வொருவரும் தன் சமூகத்தினர் இடையே உள்ள செயல்கள், சிந்தனைகள், பழக்கவழக்கங்கள் ஆகியன சரிதானா என்று சிந்தித்து, அவற்றில் சரியானதை தேர்வு செய்து வாழ வேண்டும்.
அப்படி வாழ்வோரே சமூக சீர்திருத்தவாதிகள் என அறியப்படுவர்.
அப்படி தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகளில் 1400 வருடங்களாக அனைத்து மக்களாலும் போற்றப்படுகிற மாமனிதர் நபிகள் நாயகம் அவர்கள் ஆவர்.
அஸ்கிலிபியஸ் ஸை பற்றி மேலும் அறிய கீழ்காணும் தளங்களை காணுங்கள்.
https://weyes57.blogspot.com/2016/05/and-corvi.html?m=1
Comments
Post a Comment