மூன்று வானவர்கள்

சூஃபிகளின் ஹஜ்: - 66
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

மூன்று வானவர்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 

"அல்லாஹ்விற்கென மூன்று வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கஃபாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர். என் மஸ்ஜிதிற்கென நிர்ணயிக்கப்பட்ட வானவர். மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர்கள் ஆவார்.

கஃபாவிற்கென நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுவார். யார் அல்லாஹ்வின் கடமைகளை விட்டு விடுகிறாறோ அவர் அல்லாஹ்வின் பாதுகாவலிலிருந்து வெளியேறி விடுகிறார்.

என் மஸ்ஜிதுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுகிறார். 

யார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்களை விட்டு விடுகிறாறோ அவர் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸர் அருகே வரமுடியாது; அவருக்கு நபிகளாரின் ஷஃபாஅத்தும் கிடைக்காது.

மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட வானவர் தினமும் கூறுகிறார். யார் ஹராமான உணவை உண்ணுகிறாறோ அவரது அமல்கள் மறுமை நாளில் அவரது முகத்தில் தூக்கி வீசப்படும்."

நூல்: ஃபளாயிலு பைத்துல் முகத்தஸ்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்