தன்னை ஜியாரத் செய்ய அழைத்த நபிகள் நாயகம் :

சூஃபிகளின் ஹஜ் : - 57
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~

தன்னை ஜியாரத் செய்ய 
அழைத்த நபிகள் நாயகம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

அல்லாமா ஸுப்கீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

பைத்துல் முகத்தஸ் வெற்றிகொண்ட பிறகு ஹள்ரத் பிலால் (ரலி) அவர்கள், கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தாம் இங்கேயே தங்கிவிடுவதாக அனுமதிக் கோரினார்கள். 

அவர்களின் கோரிக்கையை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 

அதன் பிறகு அவர்கள் அங்கேயே தங்கி, நிக்காஹ்வும் செய்து கொண்டார்கள். 

பின்னர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்கள். 

கனவில் நபி (ஸல்) அவர்கள், "பிலாலே! இது என்ன அநியாயம்! என்னை ஜியாரத் செய்யும் நேரம் இன்னும் வர வில்லையா?'' என்று கேட்டார்கள். 

இக்கனவை கண்டு விழித் தெழுந்ததும்  பிலால் (ரலி) அவர்கள் மிக்க வருத்தத்தோடும், பயத்தோடும் உடனே ஒட்டகையை அவிழ்த்துக் கொண்டு  மதீனாவை நோக்கி பயணமானார்கள்.  

மதீனா சென்றடைந்ததும் அழுதவர்களாக கப்ரு ஷரீபின் முன்பு நின்றார்கள். நீண்ட நேரம் மௌனமாக முராக்கபாவில் நின்று இருந்தார்கள்.

அவர்களின் வரவை கேள்விப்பட்ட ஹள்ரத் ஹஸன் (ரலி), ஹள்ரத் ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் அவர்களைச் சந்திக்க வந்தார்கள். ஹள்ரத் பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பேரன்மார்களைக் கட்டி அணைத்துக் கொண்டார்கள். 

பிறகு பாங்கு சொல்லுமாறு அவ்விருவரும் வேண்டிக் கொண்டார்கள். அவர்களின் உத்தரவுக்கிணங்க பாங்கு சொன்னார்கள்.

பாங்கு சப்தத்தை கேட்டதும் மதீனாவின் ஆண்களும் பெண்களும் அழுதுகொண்டே நிம்மதியற்று வீட்டிலிருந்து வெளியேறி மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலை நோக்கி ஓடி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கால நினைவுகள் அனைவர் உள்ளத்திலும் நிழலாடியது. அதை தாங்க இயலாமல் அனைவரும் பரிதவித்தனர். 

அல்லாஹ் நாடியவருக்கே ஹஜ் செய்யும் பாக்கியமும் நபிகளாரை ஸியாரத் செய்யும் பாக்கியமும் கிடைக்கும். 

நபி (ஸல்) அவர்கள் சிலரை தம்மை வந்து ஜியாரத்து செய்யும்படி கூறியிருக்கிறார்கள். சிலரை தாமே சென்று சந்தித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு வகையினரும் பெரும் சிறப்பு உடையவர்கள் ஆவார். இவர்களில் ஒருவராக நம்மையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!

*********

பல ரிவாயத்துக்களில் காணப்படுவதாவது : 

ஹள்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் நிரந்தரமாகவும்,
தொடர்ந்தும் ஷாம் நாட்டிலிருந்து ஒட்டகையின் மீது செல்லும் தூதுவர்களை மதீனாவிற்கு அனுப்பி வந்தார்கள். 

இவர்களின் பணி, நபி (ஸல்) அவர்களுக்கு உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களின் ஸலாமை எத்தி வைப்பது தான்!

அந்தத் தூதர்கள் மதினாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃபில், உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஸலாமை எத்தி வைப்பார்கள். 

நூல்: ஷபாவுல் அஸ்காம் வல் அஹ்ஜான்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்