ஒரு கிராமத்தாரின் சொல் ரவ்ளா வாசலில்.........

சூஃபிகளின் ஹஜ் : - 64
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஒரு கிராமத்தாரின் சொல் 
ரவ்ளா வாசலில் ..............‌‌..........
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

முஹம்மது பின் ஹர்புல் ஹுளாலீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். 

நான் மதீனா மன்ஜிதிற்குள்  நுழைந்தேன். நபிகளாரை ஸியாரத் செய்வதற்காக அவர்களின் கப்ரு அருகே சென்றேன். 

அச்சமயம் ஒரு கிராமப்புற அரபி வந்து நபிகளாரை ஜியாரத் செய்தார். 

பிறகு அவர் “ரசூல்களில் சிறந்தவரே! நிச்சயமாக அல்லாஹ் உம்மீது 
உண்மையான வேதத்தை 
அருளியுள்ளான். 

அதில் "மனிதர்கள்  தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டு (நபியே) அவர்கள் உம்மிடம் வந்து  அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறார்கள் ; பின்னர் அவர்களுக்காக (அல்லாஹ்வின்) ரசூலும் பாவமன்னிப்பு தேடினால் (அப்பொழுது) அல்லாஹ்வை தவ்பா - பாவ மன்னிப்பு  ஏற்றுக் கொள்கிறவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அவர்கள் காண்பார்கள். 4:64 எனக் கூறியுள்ளான். 

எனவே என் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்பதற்காக (நபியே) நீங்கள் ஷஃபாஅத் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதற்காக உம்மிடம் வந்துள்ளேன்" என கூறி அழுது புலம்பி நபிகளாரின் மீது ஒரு கவி பாடினார். அதன் பொருள் .

கண்ணியமான இடத்தில் 
அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் கண்ணியமானவரே! 

அடக்க விடத்திலும் 
அதன் சுற்றுப்பகுதியிலும் 
உங்களின் உடல் மனத்தினால் 
மனம் பரவிக் காணப்படுகிறது. 

நீங்கள் அடங்கி இருக்கும் 
அடக்க விடத்திற்கு 
என் ஆன்மாவை அர்ப்பணிக்கிறேன்! 

அங்கே மன்னிப்பவரும், கொடை வள்ளலும், கண்ணியமானவரும் அல்லவா இருக்கின்றார்!

பிறகு இஸ்திஃபார் - செய்தார். சென்று விட்டார்.

நான் உட்கார்ந்திருந்த நிலையில் உறங்கி விட்டேன். கனவில் நபிகளாரைப்  பார்த்தேன். அப்பொழுது அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் என் ஷஃபாஅத் மூலம் மன்னித்து விட்டான் என்ற நற்செய்தியை அவரை சந்தித்து நீங்களே  சொல்லுங்கள்" என்றார்கள். 

நான் அவரைத் தேடி ஓடினேன். அவரை நான் எங்கும் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்தச் செய்தியை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தன் தந்தையிடம் இருந்து அறிவிக்கிறார். இவர் ஹிஜ்ரி 228 இல் காலமானார். 

இந்தச் செய்தி பல அறிவிப்பாளர்களின் தொடரில் பதிவாகி இருக்கிறது.

அந்த கிராமத்தார் படித்த கவிதையை கேட்ட அபூ தய்யிப் அஹமத் பின் அப்துல் அஜீஸ் பின் முஹம்மதுல் மக்தஸீ (ரஹ்) அவர்கள் வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள். 

இன்றும் இந்த நான்கு வரி கவிதை நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீஃப்  வாசலில் உள்ள இரண்டு தூண்களில் எழுதப்பட்டு இருப்பதைக் காணலாம்.

 நூல்: இப்னு அஸாகிர், அக்பாரு மதீனத்துர் ரஸுல்

والحكاية المذكورة ذكرها جماعة من الأئمة عن العتبي، وأسمه محمد بن عبد الله بن عمرو بن معاوية بن عمرو بن عتبة بن أبي سفيان : صخر بن حرب كان من أفصح الناس صاحب أخبار ورواية للأدب، وحدث عن أبيه وسفيان بن عيينة، توفي سنة ثمان وعشرين ومائتين، يكنى أبا عبد الرحمن.
وذكرها ابن عساكر في تاريخه وابن الجوزي في مثير العزم الساكن وغيرهما بأسانيدهم إلى محمد بن حرب الهلالي قال : دخلت المدينة فأتيت قبر النبي صلى الله عليه وسلم فزرته فجلست حذاءه فجاء إعرابي فزاره ثم قال : يا خير الرسل إن الله أنزل عليك كتاباً صادقاً قال فيه : { وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ لِيُطَاعَ بِإِذْنِ اللّهِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُواْ أَنفُسَهُمْ جَآؤُوكَ فَاسْتَغْفَرُواْ اللّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُواْ اللّهَ تَوَّابًا رَّحِيمًا } (النساء 064) وقد جئتك مستغفراً من ذنبي مستشفعاً بك إلى ربي ثم بكى وأنشأ يقول :

يا خير من دفنت بالقاع أعظمه... 
فطاب من طيبهن القاع والأكم
نفسي الفداء لقبر أنت ساكنه... 
فيه العفاف وفيه الجود والكرم

ثم استغفر وانصرف، فرقدت فرأيت النبي صلى الله عليه وسلم في نومي وهو يقول : إلحق الرجل فبشره أن الله قد غفر له بشفاعتي، فاستيقظت فخرجت أطلبه فلم اجده، قال وقد نظم أبو الطيب أحمد بن عبد العزيز بن محمد المقدسي، وسأله بعضهم الزيارة على هذين البيتين وتضمينهما فقال : 

ورواه ابن عساكر

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்