நபிகளார் மீது உச்சகட்ட அன்பு
சூஃபிகளின் ஹஜ் : - 54
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நபிகளார் மீது
உச்சகட்ட அன்பு
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
உவைஸுல் கர்னீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜு செய்துவிட்டு மதீனா வந்து மஸ்ஜிதுந் நபவியில் நுழைந்தார்கள்.
அப்பொழுது ஒருவர் சைகையாக அதுதான் நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த கப்ரு ஷரீப் என சுட்டி காட்டினார்.
உடனே உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள்;
மூர்ச்சை தெளிந்ததும், "என்னை அழைத்துச் செல்லுங்கள்; நபி (ஸல்) அவர்கள் இல்லாத இந்த நகரில் நான் இருப்பதற்கு மனமில்லை" என்றார்கள்.
மேலும் கீழ்க்கண்டவாறு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அழைத்து செல்லப்பட்டார்கள்.
لوجِئْتُكُمْ فَاصِدًا أَسْعَى عَلَى بَصَرِي * لَمْ أَقْضِ حَقَّادَ أَنَّ الْحَقِّ أَدَّيْتُ
நான் தங்களின் சமூகத்திற்கு
கால்களுக்குப் பதிலாக கண்களால் நடந்து வந்தாலும், தங்களுக்கு நன்றிக் கடனைச் செலுத்தியவனாக ஆகமாட்டேன்.
என் தலைவரே! தங்களுக்கு வேறு எந்த நன்றிக் கடனை நான் முறையாக நிறைவேற்றி இருக்கிறேன் ; இதனை (ஜியாரத்தை) மட்டும் நிறைவேற்றுவதற்கு?
நபி (ஸல்) அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் இவ்வாறு கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்வற்கு ஆவலாக இருக்க வேண்டும். அவர்களை ஜியாரத்து செய்த பிறகு வருத்தத்தோடு திரும்ப வேண்டும்.
Comments
Post a Comment